Sabarimalai: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு... 52 லட்சம் பேர் சாமி தரிசனம்

Jan 20, 2025,10:28 AM IST

பத்தினம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல-மகரவிளக்கு சீசன் நிறைவடைந்ததை அடுத்து ஜனவரி 20ம் தேதியான இன்று காலையுடன் கோவில் நடை அடைக்கப்பட்டது.


சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி மாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. நவம்பர் 16ம் தேதி துவங்கி, டிசம்பர் 26ம் தேதி வரை தொடர்ந்து 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 52 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக புள்ளிவிவரக் கணக்குகள் தெரிவிக்கின்றன.


மண்டல பூஜைகள் நிறைவடைந்ததை அடுத்து டிசம்பர் 26ம் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்பட்டு, மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. டிசம்பர் 30ம் தேதி துவங்கி, ஜனவரி 20ம் தேதி வரை மகரவிளக்கு உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் ஜனவரி 14ம் தேதி மகரசங்கராந்தி அன்று நடைபெற்றது. அதற்கு பிறகு மகர மாத பூஜைகள், படி பூஜை ஆகியவை நடத்தப்பட்டன. 




மகரவிளக்கு உற்சவம் ஜனவரி 20ம் தேதி வரை நடைபெறும் என சொல்லப்பட்டிருந்தாலும் ஜனவரி 19ம் தேதியான நேற்று வரை மட்டுமே பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை 6 மணியுடன் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் நோக்கி செல்வது நிறுத்தப்பட்டது. ஜனவரி 20ம் தேதியான இன்று காலை நடைபெற்ற பூஜையில் பந்தள அரண்மனையை சேர்ந்தவர்கள், தேவசம் போர்டு நிர்வாகிகள் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். வழக்கமான பூஜைகள் நிறைவடைந்த பிறகு காலை 06.30 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டது.


இந்த ஆண்டு மகரவிளக்கு சீசனான டிசம்பர் 30 முதல் ஜனவரி 19 வரை 19,00,789 ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நவம்பர் 15ம் தேதி துவங்கி, ஜனவரி 19ம் தேதி வரை நடைபெற்ற இந்த ஆண்டுக்காக மண்டல-மகர விளக்கு உற்சவ காலத்தில் மொத்தமாக 51,92,550 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 லட்சம் பேர் அதிகமாக சாமி தரிசனம் செய்துள்ளனர். சத்திரம் வழியாக மட்டும் இந்த ஆண்டு 1.3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.


இந்த ஆண்டு 25 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு சபரிமலையில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கோவிலின் வருமானமும் அதிகரித்துள்ளது. எந்த விதமான புகார்கள், குறைகள் இல்லாமல் இந்த ஆண்டு மண்டல-மகரவிளக்கு பூஜைகள் சுமூகமாக நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த போலீசார், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்