மாஸ்கோ: ரஷ்யா அதிபர் விலாடிமிர் புடின் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. தேதிகள் பரிசீலனையில் உள்ளதாகவும், முடிவானதும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுடன் கடும் போரில் ஈடுபட்டுள்ளது ரஷ்யா. மறுபக்கம் அமெரிக்காவுடனும் பனிப் போர் நீடிக்கிறது. பல்வேறு சவால்களிலும், சிக்கலிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. இந்த நிலையில் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. அதில் இந்தியாவும் ஒன்று.
ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் இதுதொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் இந்தியாவுக்கு வரவுள்ளதாக கிரம்ளின் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பேச்சுக்கள் நடந்து வருவதாகவும், தேதிகள் முடிவானதும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது இந்திய பயணத்தின்போது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, புடின் சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கடைசியாக இரு தலைவர்களும் கடந்த அக்டோபரில் ரஷ்யாவின் கசான் நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின்போது சந்தித்துப் பேசினர் என்பது நினைவிருக்கலாம். அந்த சந்திப்பின்போதுதான் இந்தியாவுக்கு வருமாரு புடினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று தற்போது புடின் இந்தியா வரவுள்ளார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக முக்கியமாக புடினுடன் இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாவால்தான் முடியும் என்று பல்வேறு நாடுகளும் கருதுகின்றன. எனவே புடினின் இந்திய வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவின் நீண்ட கால நண்பனாக விளங்குவது ரஷ்யா. நேரு காலத்திலிருந்தே ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சகோதர நட்பு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
More Rains on the way: நவ. 23ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகிறது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின்.. தேதிகள் விரைவில் அறிவிப்பு.. கிரம்ளின் தகவல்
LIC.. தொழில்நுட்பக் கோளாறால் இந்தி வந்து விட்டது.. வருத்தம் தெரிவித்தது எல்ஐசி நிறுவனம்
இந்தி மயமான எல்ஐசி இணையதளம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
திருச்செந்தூர் தெய்வானைக்கு திடீரென அவ்வளவு கோபம் வரக் காரணம்.. பாழாய்ப் போன அந்த செல்பிதான்!
Lunch box recipe : ரத்த சோகையை ஓட ஓட விரட்டும் சூப்பரான கோங்கூரா தொக்கு
ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி.. சேலம் டிரெய்னருக்கு நேர்ந்த பரிதாபம்.. இளம் வயது மாரடைப்பு என்ன காரணம்?
Short Film.. கடற்கரை .. வாழ்க்கையின் வலிகளை எளிமையாக சொல்லும் அழகான குறும்படம்!
ஹமாரா எல்ஐசி ஹே.. பூரா இந்தி ஹே.. முற்றிலும் இந்தி பேசும் தளமாக மாறிய எல்ஐசி!
{{comments.comment}}