அடக்கம் செய்யப்பட்டார்.. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி.. ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி!

Mar 02, 2024,12:46 PM IST

மாஸ்கோ:  சில தினங்களுக்கு முன்பு சிறையில் உயிரிழந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடல் மாஸ்கோவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இறுதிச் சடங்கின்போது, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் அதிபர் புடினை எதிர்த்து சினாட்ராவின் மை வே பாடலை இசைத்து இறுதி மரியாதை செலுத்தினர். நவல்னியின் பெயரை சொல்லிக்கொண்டே கல்லறையின் வெளியே ஏராளமான ஆதரவாளர்கள் மலர்களை ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.


நவல்னியின் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு ஒரு வெள்ளை துணியால் மூடப்பட்டு இருந்தது. சவப்பெட்டியின் அருகே அவரது தாய் லூட்மிலா கருப்பு உடை அணிந்தும், தந்தை நவல்னியின் நெற்றியில் முத்தம் கொடுத்தும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இவர்களுடன் உறவினர்கள் நண்பர்கள் என பலர் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர்.




ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டு வந்தர் நவல்னி. 47 வயதான நவல்னி, எதிர்கால ரஷ்யா என்ற கட்சியை நடத்தி வந்தார். இவர் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்தாலும், இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது. வருங்காலத்தில் இவர் ரஷ்யாவை ஆள்வார் என்றும் கணிக்கப்பட்டு வந்தது. இதனை விரும்பாத ரஷ்ய அதிபர் புடின் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கடந்த 2021 ஆம் ஆண்டு சிறையில் அடைத்தார்.


புடின் அரசு சுமத்திய ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 30 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவர் ஆர்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வாக்கிங் போனபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இறந்ததற்கான காரணத்தை இதுவரை ரஷ்ய அரசு வெளியிடவில்லை. 

நவல்னி மர்மமான முறையில் உயிரிழந்தது பல்வேறு குழப்பங்களையும், சர்ச்சைகளையும், ஏற்படுத்தியது.


ஏற்கனவே அதிபர் புடின் தன்னைக் கொலை செய்ய  முயற்சிப்பதாக நவல்னி குற்றம் சாட்டிய நிலையில் அவர் திடீரென சிறையில் உயிரிழந்தது மேலும் பரபரப்பைக் கூட்டியது. இதுவரை இதுகுறித்து அதிபர் புடின் வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்