அதிமுக கூட்டணியில் தேமுதிக.,விற்கு 4 சீட்டா?... தீயாய் பரவும் தகவலால் பரபரக்கும் அரசியல் களம்

Mar 05, 2024,06:09 PM IST

சென்னை: நாளை அதிமுக- தேமுதிக இடையே  2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கான தேதி குறித்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளிவரும் என எதிர்பார்த்து வருகின்றனர்.இதற்காக ஒவ்வொரு கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்து வருகின்றனர். திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில்,அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தீவிரமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறது.




மேலும் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் 14 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதியை கொடுக்கும் கட்சிகளுடனே கூட்டணி அமைப்பதாக சமீபத்தில் தெரிவித்து வந்தார். இந்த கூட்டணி ரகசியமாக நடைபெற்று வந்ததாகவும் தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பிரேமலதா விஜயகாந்த் வசிக்கும் சாலிகிராமம் வீட்டில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் முதல் கட்ட பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.


தற்போது அதிமுக -தேமுதிக இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. இதில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  ஏற்கனவே அதிமுக முதல் கட்ட பேச்சு வார்த்தையில் மாநிலங்களவை பதவி தொடர்பாக தேர்தலுக்குப் பின் முடிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டதாகவும் கிருஷ்ணகிரி, விருதுநகர், திருச்சி, கடலூர் ,ஆகிய தொகுதிகளை ஒதுக்க தேமுதிக வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்