அடுத்த மாதம் தமிழகத்தின் துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி?.. விடாமல் துரத்தும் கிசுகிசு!

Jul 19, 2024,05:33 PM IST

சென்னை :   தமிழகத்தின் துணை முதல்வராக அமைச்சர் உதவியநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாகவும், அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளதாகவும் தமிழக அரசியல் களத்தில் தகவல் ஒன்ற தீயாய் பரவி வருகிறது. 


தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நீடித்து வந்த அதிமுக ஆட்சியை வீழ்த்தி, 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனார். இந்த தேர்தலில் நடிகரும், தயாரிப்பாளரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.  இவருக்கு 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. உதயநிதி தற்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து வருகிறார்.




ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு, சில அமைச்சர்களில் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டு, உதயநிதிக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால், அடுத்ததாக உதயநிதி தமிழகத்தின் துணை முதல்வராக ஆக்கப்படுவார் என பேச்சு அடிப்பட்டது. இது பற்றி இந்த ஆண்டு ஜனவரி மாதமே முதல்வர் ஸ்டாலினிடமும் கேட்கப்பட்டது. ஆனால் அவர் அதை திட்டவட்டமாக மறுத்து விட்டார். உதயநிதி உட்பட அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக பணியாற்றிக் கூடியவர்கள் தான் என்றார். அதற்கு பிறகு இந்த பேச்சு ஓய்ந்து, அனைவரும் பார்லிமென்ட் தேர்தலில் பிஸியாகி விட்டனர்.


ஆனால் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின் படி, உதயநிதியை தமிழகத்தின் துணை முதல்வராக நியமிக்க திமுக தலைமை முடிவு செய்திருக்கிறதாம். இதற்கு கட்சி தலைவர்களும் ஒரு மனதாக ஓகே சொல்லி விட்டார்களாம். வரும் ஆகஸ்ட் 22ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டு செல்ல உள்ளார். அதனால் அதற்கு முன்பாக உதயநிதியை துணை முதல்வராக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது. திமுக முக்கிய தலைவர்கள் சிலரும் இந்த தகவலை இதுவரை மறுக்காமல், மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்களாம்.


விமர்சிக்க அதிமுக ரெடி!


இதற்கு அதிமுக தரப்பும் வழக்கம் போல் இதை வைத்து திமுக.,வை விமர்சித்து வருகிறது. அதிமுக தரப்பில் இது பற்றி கேட்டதற்கு, அமைச்சரவை மாற்றத்தில் பெரிய குழப்பமே நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு கட்சிக்கு கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளதாக தான் சொல்லப்படுகிறது. அப்படியே நடந்தாலும் உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்படுவதில் புதிதாக என்ன உள்ளது? ஜனநாயகம் என்ற பெயரில் தமிழகத்தில் வாரிசு ஆட்சி தானே நடந்து கொண்டிருக்கிறது?  இது தான் நடக்கும் என நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சொல்லிக்  கொண்டு இருக்கிறோம். அது மட்டுமல்ல 2026 சட்டசபை தேர்தலில் உதயநிதியை முதல்வர் வேட்பாளராகவும் நிறுத்த திமுக திட்டமிட்டுள்ளது. அது உட்கட்சிக் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்