லண்டன் : நடந்து முடிந்த பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வி அடைந்துள்ளது. தங்கள் கட்சி பெற்ற தோல்விக்காக பிரதமர் ரிஷி சுனாக் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த 14 வருடமாக கன்சர்வேட்டிவ்கட்சி ஆட்சி பீடத்தில் இருந்து வந்தது. அந்த ஆட்சியை இப்போது முடித்து வைத்து விட்டது லேபர் கட்சி.
இதுவரை வந்த முடிவுகள் விவரம்:
பெரும்பான்மைக்குத் தேவை - 326
தொழிலாளர் கட்சி - 408
கன்சர்வேட்டிவ் கட்சி - 113
லிபரல் டெமாக்கிரட்ஸ் - 69
எஸ்என்பி - 8
ஸ்காட்டிஷ் தேசிய கட்சி - 8
சீன் பின் - 7
மற்றவர்கள் - 26
லேபர் அல்லது தொழிலாளர் கட்சி மிகப் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றுள்ளது. அந்தக் கட்சியின் தலைவரான கியர் ஸ்டார்மர் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிங் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தொழிலாளர் கட்சிக்கு 410 இடங்களும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 131 இடங்களும், லிபரல் டெமாக்ராட்ஸூக்கு 61 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சி கணித்ததை விட குறைவாக அதாவது 113 இடங்களில் மட்டுமே வென்று மண்ணைக் கவ்வியுள்ளது.
இதனால் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டது. இவர்தான் இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து ஆட்சியை தொழிலாளர் கட்சி மீண்டும் பிடித்துள்ளது. அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது லேபர் எனப்படும் தொழிலாளர் கட்சி.
2010ம் ஆண்டு முதல் 14 வருட காலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்தது கன்சர்வேட்டிவ் கட்சி. ரிஷி சுனாக் தலைமையிலான அரசு மீது கடும் அதிருப்தி அலை வீசியதால் தேர்தலில் படு தோல்வி அடைந்துள்ளது. தேர்தல் தோல்வியை தொடர்ந்து ரிச்மண்ட் மற்றும் வடக்கு ஆலர்டன் பகுதியில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய ரிஷி சுனக், தேர்தலில் பெற்ற தோல்விக்காக மன்னிப்பு கேட்டதுடன், தோல்விக்கு தானே பொறுப்பேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக் பதவி இழந்ததை அடுத்து, தொழிலாளர் கட்சியின் தலைவர் ஸ்டார்மர், பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில் ஸ்டார்மர் 18,884 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் 2019ம் ஆண்டு இவர் பெற்ற 22,766 ஓட்டுக்களுடன் ஒப்பிடுகையில் இந்த முறை இவர் பெற்ற ஓட்டு விகிதம் குறைந்துள்ளது. இருந்தாலும் தங்கள் கட்சிக்காக ஓட்டளித்த ஒவ்வொருவருக்காகவும் தான் உழைக்க போவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}