சூப்பர் அறிவிப்பு.. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 1000 ரொக்கப் பரிசு.. அறிவித்து தமிழ்நாடு அரசு!

Jan 05, 2024,02:16 PM IST

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப் பரிசும் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரொக்கப் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.வேஷ்டி, சேலையும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் அதேபோல பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பொங்கல் தொகுப்புடன் ரூ. 1000 பரிசுத் தொகையும் அளிக்கப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோரிக்கை விடுத்திருந்தார். இதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் கோரிக்கை விடுத்திருந்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கோரியிருந்தார்.


இந்த நிலையில் தற்போது பொங்கல் பரிசுத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:




தமிழர்களின் அடையாளமாக அனைத்து தரப்பு மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்து தொழில்களுக்கும் ஏன் மனித குலத்திற்கு அடித்தளமாய் விளங்கி உணவளித்து வரும் விவசாய பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-1-2024 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.


மேலும் முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசு தொப்புடன் சேர்த்து இவற்றை வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


இந்நிலையில் பொங்கல் திருநாளை சிறப்பாக மக்கள் கொண்டாடிட மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாய விலை கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக அதாவது வரும் பத்தாம் தேதி அன்று மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்