இதயங்கள் நொறுங்கின.. பெங்களூரு வெற்றி.. ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்

May 19, 2024,12:16 AM IST

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி, நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மொத்த சென்னை ரசிகர்களின் இதயங்களும் நொறுங்கிப் போய்  விட்டன.


பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் இன்று பெங்களூர், சென்னை இடையிலான முக்கியமான ஐபிஎல் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெயித்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது.  அதே நிலையில்தான் பெங்களூரு அணியும் இருந்தது.


பல்வேறு புள்ளிவிவர நெருக்கடிகளுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு அணிகள் இன்றைய போட்டியில் சந்தித்தன. ஆனால் தொடக்கத்தில் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மழை விட்டதைத் தொடர்ந்து மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில் பெங்களூரு அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் குவித்தது.




விராட் கோலி 47, பாப் டூ பிளஸிஸ் 54. ரஜத் படிதார் 41 என்று பிரித்து மேய்ந்தனர். மறுபக்கம் கேமரூன் கிரீன் 38 ரன்கள் குவித்தார். கடைசி ஓவர்களில் தினேஷ் கார்த்திக் மிரட்டினார் 6 பந்துகளில் அதிரடியாக அவர் 14 ரன்களைக் குவிக்க, கடைசி முனையில் கிளன் மேக்ஸ்வெல் 5 பந்துகளில் 16 ரன்களை அள்ளினார். கடைசி ஓவர்களில் பெங்களூரு அதிரடி காட்டியதால் 20 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 218 ஆக எகிறி விட்டது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரன்ரேட் அடிப்படையில் 201 ரன்கள் எடுத்தால் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று விடும். அதேசமயம், 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றாலும் பிளே ஆப் உறுதியாகி விடும். அதேபோல 201 ரன்களுக்குள் சென்னையைச் சுருட்டி வென்றால் மட்டுமே பெங்களூருக்கு பிளே ஆப் கனவு நனவாகும். மாறாக அதைத் தாண்ட விட்டு, சென்னை தோற்றாலும் கூட அது பெங்களூருக்கு பலன் தராது. இப்படிப்பட்ட நிலையில் சேசிங்கைத் தொடங்கியது சென்னை அணி.


இன்றைய போட்டியில் சென்னை அணியின் பந்து வீச்சு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஷர்துள் தாக்கூர் மட்டுமே 2 விக்கெட்களை எடுத்தார். எக்கானமி என்று பார்த்தால் மைக்கேல் சான்ட்னர் 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட் எடுத்ததைச் சொல்லலாம். 


சேசிங்கில் தடுமாற்றம்.. கடைசியில் ஷாக்கிங் தோல்வி




மிகப்பெரிய வெற்றி இலக்கை சேஸ் செய்ய ஆரம்பித்த சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றமே மிஞ்சி இருந்தது. அவர்களது பேட்டிங்கை, பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் மிகத் திறமையாக முறியடித்தனர். கேப்டன் ருத்துராஜ் எதிர்பாராத விதமாக அவுட் ஆனது சென்னை ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.


அவரைத் தொடர்ந்து முன்னணி பேட்ஸ்மென்கள் வேறு யாரும் பெரிய அளவிலான ஸ்கோரை எடுக்க முடியாமல் தடுமாறினர்.  காரணம் பெங்களூரு அணியின் பந்துவீச்சு மிக மிக நேர்த்தியாகவும் பிரில்லியன்டாகவும் இருந்ததே காரணம். இந்த பௌலிங்கை முறியடித்து ஓரளவு நல்ல ஸ்கோரை எடுத்தவர் என்றால் அது ரச்சின் ரவீந்திரா மட்டுமே. அவர் 61 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராத விதமாக அவுட் ஆனார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டேரில் மிட்சல் 4 ரன்களில் வீழ்ந்தார். 


அதேபோல  இன்றைய போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிவம் துபே பெரும் ஏமாற்றத்தை கொடுத்து விட்டார். அதிக பந்துகளை சாப்பிட்ட அவர் வெறும் 7 ரன்களில் சுருண்டதை ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. ரன் எடுக்க முடியாமல் தடுமாறினார். அவரை குறிவைத்து பந்து வீசிய பெங்களூர் அணி திட்டமிட்டு அவரை அவுட் ஆக்கி வெளியேற்றியது. அஜிங்கியா ரஹானே சற்று நம்பிக்கை கொடுத்தார். 33 ரன்களைக் குவித்தார். ஆனால் அவர் அவுட்டான நிலையில் ரவீந்திர ஜடேஜாவும், தோனியும் கை கோர்த்தனர். இந்த ஜோடி கிட்டத்தட்ட  பிளேஆப் தகுதி இலக்கை நெருங்கி விட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தோனி அவுட்டானதால் நம்பிக்கை தளர்ந்து போனது. கடைசி ஓவரில் ஷார்துள் தாக்கூர் சொதப்ப, ஜடேஜா தடுமாற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்னிங்ஸ் 191 ரன்களுடன் முடிவுக்கு வந்தது. பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெறத் தவறியது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்