நான் ஓய்வு பெற போகிறேனா?...ரோகித் சர்மா அளித்த சூப்பர் பதில்...குஷியான ரசிகர்கள்

Jan 04, 2025,07:12 PM IST

டெல்லி: இந்திய அணியின் கேப்டனாக பதவி வகித்து வரும் ரோஹித் சர்மா, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறார் என வதந்திகள் பரவி வந்த நிலையில், ஃபார்மில் இல்லாததால் விலகி இருக்கிறேன் தவிர ஓய்வு பெறவில்லை. நான் எப்போதும் ஓய்வு பெற வேண்டும் என்பதை வெளியில் இருப்பவர்கள் முடிவு செய்ய முடியாது என ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.


இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் சிட்னியில் தற்போது நடைபெற்று வருகிறது.முன்னதாக பும்ரா தலைமையில் முதல் டெஸ்ட்  தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன் பிறகு  இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கு ரோகித் சர்மா  கேப்டனாக  தலைமை தாங்கினார். ஆனால் இரண்டு போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. மூன்றாவது டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்தது. நான்காவது போட்டியில் ஆஸ்திரேலிய வெற்றி பெற்றது.




நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலுமே ரோகித் சர்மா பேட்டிங் சரியாக இல்லை. சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து இருந்தார். இதனால் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து தனது 5வது டெஸ்டில் இருந்து ஓய்வு அளிக்கும் படி ரோகித் சர்மா கேட்டிருந்தார். இதற்கு பயிற்சியாளர் கவுதம் காம்பீர் உள்ளிட்டோரும் ஒப்புதல் தெரிவித்தாக சொல்லப்படுகிறது.


கடைசி டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கில் ஐந்தாவது டெஸ்ட் தொடர் பட்டியலை பிசிசிஐ நிறுவனம் வெளியிட்டது. இதில் ரோஹித் சர்மா பெயர் இடம் பெற்றவில்லை. மாறாக அணியின் கேப்டனாக மீண்டும் பும்ராவே பொறுப்பேற்றார்.  ரோகித் சர்மா பேட்டிங் இடத்தை நிரப்ப கில் வாய்ப்பு பெறுகிறார் என்று அதில் கூறப்பட்டது. பிசிசிஐ வெளியிட்ட பட்டியலில் ரோகித் சர்மா பெயர் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே சமயத்தில்  ரோஹித் சர்மா பெயர் இடம் பெறாதது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது. மேலும் ரோகித் சர்மா பெயர் பட்டியலில் நீக்கப்பட்டதற்கு காரணம் கௌதம் கம்பீர் எனவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா விலகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் ரோஹித் சர்மா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறார் என பல்வேறு தரப்பிலும் வதந்திகள் காட்டுத் தீயாய் பரவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிட்னியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த ரோகித் சர்மா கூறியதாவது, நான் ஃபார்மில் இல்லை. என்னால் ரன்கள் எடுக்க முடியவில்லை. 5வது டெஸ்ட் போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆகையால் நான் கடைசி போட்டியில் இருந்து விலக முடிவெடுத்தேன். இது குறித்து பயிற்சியாளர், தேர்வாளரிடம் தெரிவித்தேன். அவர்கள் எனது முடிவை ஏற்றுக் கொண்டனர்.

 

மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு பிறகே இந்த சிந்தனை எனது மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அதிகமான ரன்கள் அடித்தும் என்னால் அதை செய்ய முடியவில்லை. ஆகவே இந்தப் போட்டியில் இருந்து ஒதுங்குவது எனக்கு முக்கியமானது என்று நினைத்தேன். நான் ஓய்வு முடிவு எடுக்கவிலை. ஓய்வு பெற போவதில்லை. கடைசி போட்டியில் இருந்து தான் விலகி இருக்கிறேன். ஐந்து மாதங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் நிகழ்காலத்தில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன். இந்த தொடரில் நான் ரன்கள் அடிக்காததால் ஐந்து மாதங்களுக்குப் பிறகும் நான் இப்படியே ரன்கள் அடிக்காமல் இருப்பேன் என்பதை சொல்ல முடியாது. ஏனெனில் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை மாறுகிறது. நான் என்னை நம்புகிறேன்.


 நான் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் நீண்ட காலம் விளையாடி வருகிறேன். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் அல்லது வெளியே உட்கார வேண்டும் அல்லது அணியை வழிநடத்த வேண்டும் என்பதை வெளியில் இருந்து யாரும் முடிவு செய்ய முடியாது. நான் விவேகமானவன், முதிர்ச்சியடைந்தவன். வாழ்க்கையில் எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியும் என விளக்கம் அளித்து கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்.. அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

Happy Pongal.. பொங்கல் பண்டிகைக்காக.. சென்னையிலிருந்து.. 14,104 சிறப்பு பஸ்கள் இயக்கம்!

news

தமிழ்நாடு இறுதி வாக்காளர் பட்டியல்.. அதிக, குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி எவை தெரியுமா?

news

அபார்ட்மென்ட் நாய், பூனைகளுக்கு ஹேப்பி நியூஸ்.. வளர்க்க கட்டுப்பாடு கிடையாது.. சென்னை கோர்ட் அதிரடி

news

அச்சச்சோ.. சீனாவிலிருந்து வந்துருச்சு.. இந்தியாவின் முதல் HMPV வைரஸ்.. பெங்களூருவில் கண்டுபிடிப்பு

news

தமிழ்நாடு முழுவதும்.. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு.. கலெக்டர்கள் வெளியிட்டனர்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஆளுநர் உரைக்கு முன்பு தேசிய கீதம் பாடப்படவில்லை.. வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்

news

3வது ஆண்டாக சர்ச்சை.. தமிழ்த் தாய் வாழ்த்தால் தொடரும் சலசலப்பு.. வெளிநடப்பு செய்த ஆளுநர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்