- சங்கமித்திரை
சென்னை: லியோ டிரைலர் பாக்க ஆயிரக்கணக்கில் குவிந்த விஜய் ரசிகர்களால் ரோகினி தியேட்டரில் பெரும்பாலான இருக்கைகள் சேதமடைந்து விட்டன.
விஜய் நடித்த லியோ படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இதை சென்னை உள்பட பெரும்பாலான தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்தனர். இந்த தியேட்டர்களில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்ததால் தியேட்டர்கள் தடுமாறிப் போயின.
சென்னை ரோஹினி தியேட்டரில் வழக்கமாக கார் பார்க்கிங் பகுதியில் பெரிய ஸ்கிரீன் வைத்துத்தான் டிரைலரை ஒளிபரப்புவார்கள். ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி கொடுக்காததால் தியேட்டருக்குள் ஒளிபரப்பினர். இதையடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தியேட்டருக்குள் புகுந்ததால் தியேட்டரே துவம்சம் ஆகி விட்டது.
ரசிகர்கள்யாருமே உட்கார்ந்து டிரைலைரப் பார்க்க வில்லை. மாறாக சீட்டுகள் மீது ஏறி நின்றும் அதை மிதித்துச் சென்றும் போனதால் தியேட்டரே போர்க்களம் போல காணப்பட்டது. ஒரு சில சீட்டுகளைத் தவிர பெரும்பாலான சீட்டுகள் சேதமடைந்து விட்டன. உடைந்தும் பிய்ந்தும் போய் விட்டன.
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
{{comments.comment}}