Riddle.. குண்டன் குழியில் விழுவான்.. குச்சிப்பையன் தூக்கி விடுவான்.. அவன் யாரு?

Sep 27, 2024,02:36 PM IST

நம் நாட்டில் நிறைய பேருக்கு சொல் விளையாட்டுக்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் தமிழில் உள்ள சொல் விளையாட்டுகள் போல வேறு மொழியில் இருக்குமா என்று தெரியவில்லை. 


சொல் விளையாட்டுக்கள் என்றால் என்ன என்று தானே கேட்கிறீர்கள்..அது வேறு ஒன்றும் இல்லை. நாம் கேட்கும் கேள்விக்கு அதில் ஒளிந்திருக்கும்  பொருளை கண்டுபிடிப்பதே சொல் விளையாட்டுக்கள். அதே தான் நவ நாகரிக காலகட்டத்தில் விடுகதைகள் என்றும் கூறி வருகின்றனர். அப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவரின் சிந்தனைகளை தூண்டவே விடுகதைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 


விடுகதைகள் நமது அறிவையும், சிந்தனையையும், யோசனையையும் தூண்டி விடுபவை. நம்மை கேள்வி கேட்க வைப்பவை, சிந்திக்க வைப்பவை. இதனால் நாமளும் ஒரு  அறிவாளியாக இருக்க மாட்டோமா என பலரும் கேட்கப்படும் விடுகதைகளுக்கு  ஆர்வமாக பதில் கூறி வருகின்றனர். அப்படி பதில் கூறும்போது நம் மனதில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி. 




எல்லோரும் அறிவாளியா இருக்கம்போது நீங்களும் அப்படி இருக்க வேண்டாமா.. சரி நீங்களும் அறிவாளியான்னு செக் பண்ணிப் பார்ப்போமா.. வாங்க!


1. எங்க அக்கா சிவப்பு குளித்தால் கருப்பு அது என்ன..? 


2. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன..? 


3. ஒருத்தன் வாளுக்கு உலகமே நடுங்கும் அவன் யார்..? 


4. ஒரு அரண்மனையில் 32 காவலர்கள் அது என்ன..? 


5. ஒரு கரண்டி மாவில் ஊரெல்லாம் தோசை அது என்ன..? 


6. தண்ணீரில் கரைந்திடுவான் ஆனால் வெயிலில் வைத்தால் உயிர் பிழைப்பான் அது என்ன..? 


7. திறந்த பெட்டியை மூட முடியாது அது என்ன..? 


8. பல்லே துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அது என்ன..? 


9. நமக்கு சொந்தமான ஒன்றை ஊரே அதிகம் பயன்படுத்தும் அது என்ன..? 


10. குண்டன் குழியில் விழுவான் குச்சிப்பையன் தூக்கி விடுவான் அவன் யார்..? 



(பதில்கள்: 1. அடுப்புக்கரி, 2. வெண்டைக்காய்,  3. தேள், 4. பற்கள், 5. நிலா, 6. உப்பு, 7. தேங்காய், 8. சீப்பு, 9. பெயர், 10. பணியாரம்)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.2000 நிவாரணம் .. முதல்வர் ஸ்டாலின்

news

உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியுள்ளனர்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு புகார்

news

சாத்தனூர் அணை திறப்பு.. குறை கூறும் அதி மேதாவிகளே இதைப் படிங்க.. துரைமுருகன் விரிவான அறிக்கை!

news

சாத்தனூர் அணை விவகாரம் .. தமிழ்நாடு அரசுக்கு.. டாக்டர் அன்புமணி ராமதாஸின் 7 கேள்விகள்!

news

புயல் பாதித்த குடும்பங்களை.. தவெக அலுவலகத்திற்கு அழைத்து வந்து.. உதவிகள் வழங்கிய விஜய்

news

Cooking Tips.. இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையான .. கடாய் காளான் கிரேவி!

news

அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விட்டதே பாதிப்பிற்கு காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட.. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல்!

news

கருத்து சுதந்திரம்.. சினிமா விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க முடியாது... சென்னை ஹைகோர்ட் அதிரடி

அதிகம் பார்க்கும் செய்திகள்