கன மழை.. பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.. அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

Oct 12, 2024,05:37 PM IST

சென்னை:    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. முந்தைய ஆட்சியில் ஏற்பட்டது போல மழை பாதிப்பு இம்முறை ஏற்படாது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கன மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 15ம் தேதி சென்னைக்கு மிக கன மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை பாதிப்பில் இருந்து பொது மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக அனைத்து வேலைகளும் செய்யப்பட்டு வருகிறது.




சென்னையில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. இந்த பருவமழையை எதிர்கொள்வதற்கு வேண்டிய அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. இதே போல திருச்சியில் ஏர் இந்தியா விமான பிரச்சனை வந்த நேரத்தில் நம்முடைய முதலமைச்சருடைய ஆணைக்கிணங்க நம்முடைய துறையில் இருந்து மாவட்ட ஆட்சிய தலைவர் மத்தியில் சொல்லி 18 ஆம்புலன்ஸ்கள், 3 ஃபயர் சர்வீஸ் வண்டிகளையும் அனுப்பி அதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம்.


அதேபோல் வர இருக்கின்ற  வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கு இந்த அரசாங்கம் தயாராக உள்ளது. தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. முந்தைய ஆட்சியில் ஏற்பட்டது போல மலை பாதிப்பு இம்முறை ஏற்படாது. பருவமழைக்கும் முன்பாகவே அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எந்த பகுதி முதலில் பாதிக்கப்படுகிறது என்று தெரிகிறதோ அந்த பகுதிக்கு முன்பு மீட்பு குழுக்களை அனுப்ப இருக்கிறோம். மழை பெய்து தண்ணீர் தேங்கிய பிறகும் கூட உணவு பற்றாக்குறை, குழந்தைகளுக்கு பால் பவுடர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் இருப்பதை போன முறை நாம் அணுகி இருக்கிறோம். 


அதே போல நேற்று நடந்த ரயில் விபத்தின் போது 10 இடங்களில் கல்யாண மண்டபங்களை தயார் செய்து ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் என்று சொன்னால் அவர்களை தங்க வைப்பதற்கு வேண்டி அத்தனை வேலைகளையும் நாங்கள் செய்து வைத்திருக்கிறோம். அதேபோல  முதலமைச்சரின் உத்தரவின்படி 20 பேருந்துகளையும் தயாராக வைத்து அவர்களை ஊருக்கு அனுப்புவதற்கு வேண்டிய பணிகளையும் செய்திருக்கிறோம்.


ஆக இந்த முறை முன்னெச்சரிக்கையாக அந்தந்த பகுதிகளிலேயே மழை பெய்வதற்கு முன்பாகவே உணவுப் பொருட்களையும் குழந்தைகளுக்கு வேண்டிய பால் பவுடர் போன்றவைகளும் ஆங்காங்கே முன்னெச்சரிக்கையாக ஸ்டாக் செய்து வைப்பதற்கான வேலைகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். பரவலாக மழை பெய்தால் சமாளித்து விடலாம். ஒரே இடத்தில் அதிக மழை பெய்தால் சற்று சிரமம் தான். ஒரே இடத்தில் அதிக மழை பெய்வது தொடர்பாக வானிலை அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். அவசர கால செயல் பாட்டு மையம் மூலம் உதவிகள் தேவைப்படும் பகுதிகள் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இரண்டு பேரும் சமரசம் பேசுங்க.. ஜெயம் ரவி, ஆர்த்தி ரவிக்கு.. சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவு

news

குறைக்கவோ, நீக்கவோ சொல்லத்தெரியாத அளவுதான் பெரிய ஸ்டார்களின் ஞானம் உள்ளதா?.. ப்ளூ சட்டை மாறன் கேள்வி

news

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல்.. நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட அதிமுக கோரிக்கை!

news

சென்னை குன்றத்தூரில் நடந்த விபரீதம்.. பரிதாபமாக பறி போன 2 உயிர்கள்.. எலி மருந்து இவ்வளவு கொடூரமானதா?

news

Gold Rate.. சரிந்து வந்த தங்கம் இன்று உயர்ந்தது.. சவரனுக்கு ரூ. 80 அதிகரிப்பு!

news

ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் 2024 : சிவனை இப்படி வழிபட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்!

news

இலங்கை நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியது.. ஜனாதிபதி அனுரா திசநாயக்கேவின் கட்சி.. 123 இடங்களில் வெற்றி!

news

Rain Updates: காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு!

news

நவம்பர் 15 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்