நீலகிரி: கடந்த ஒரு வாரமாக தாயிடம் இருந்து பிரிந்து வாடி வந்த குட்டி யானையை, தாயுடன் சேர்க்க வனத்துறையினர் போராடிய நிலையில், தாய் யானை குட்டி யானையை நிராகரித்து விட்டது. இதனால் குட்டி யானையை முதுமலை புலிகள் சரணாலய வளாகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று அங்கு சிறப்பாக கவனித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் கடந்த ஜூன் மூன்றாம் தேதி உடல் நலக்குறைவால் பெண் யானை ஒன்று நகர முடியாமல் கிடந்தது. அதன் வயது கிட்டத்தட்ட 40 இருக்கும்.அதனுடன் மூன்று மாத ஆண் குட்டி யானையும் இருந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் தாய் யானையை பொக்லைன் மூலம் மீட்டு கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை அளித்து வந்தனர்.அப்போது தாயுடன் இருந்த குட்டி யானையையும் வனத்துறையினர் பரமரித்து வந்தனர்.
இந்த நிலைியல் தாய் யானை உடல் நலம் தேறியதும் காட்டுக்குள் சென்று தனது கூட்டத்துடன் இணைந்தது. ஆனால் தனது குட்டியை தன்னுடன் சேர்க்க மறுத்து விட்டது. தாய் யானையுடன் சேர முடியாததால் குட்டி யானை தவித்தபடி அங்குமிங்கும் திரிந்துள்ளது. அதன் பிளிறல் சத்தம் கேட்டுவிரைந்து சென்ற வனத்துறையினர் டாப்சிலிப் பகுதிக்கு பாகனை அழைத்து வந்தனர். இதன் பின்னர் பாகன் உதவியுடன், தாய் யானையை கண்டறிந்து குட்டி யானையை தாயுடன் சேர்க்க பல கட்டமாக முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியை தழுவியது. இதனால் குட்டி யானைக்கு பால் பழம் கொடுத்து ஒரு குழந்தையைப் போல பாகன் மிகவும் பாசமாக கவனித்து வந்தார். கடந்த மூன்று நாட்களாக குட்டி யானையை மீண்டும் மீண்டும் தாயுடன் சேர்ப்பதற்கான பணிகளை வனத்துறையினர் தீவிர படுத்தினர். இந்த நிலையில் தாய் யானை குட்டி யானையை நிராகரித்து விரட்டியதால் வேறு வழியில்லாமல், வனத்துறை அதிகாரிகளின் உத்தரவின் படி முதுமலை புலிகள் காப்பத்தில் உள்ள தெப்பக்காடு யானை முகாமில் குட்டி யானையை பராமரிக்குமாறு உத்தரவிட்டனர்.
இதன்படி,குட்டி யானை இன்று அதிகாலை நான்கு மணி அளவில் முதுமலை யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு குட்டி யானையை பாகன் சிறப்பாக கவனித்துக் கொள்கிறார். அதற்குத் தேவையான உணவு பால் பழம் உள்ளிட்டவை கொடுக்கப்படுகிறது. அதே முகாமில் மேலும் ஒரு குட்டி யானையும் இருக்கிறது. இதனால் மீட்கப்பட்ட குட்டி யானைக்கு சரியான கம்பெனி கிடைத்துள்ளதால் விளையாடுவதில் பிரச்சினை இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாகவே குட்டி யானைகளை தாய் யானை கைவிடாது. ஆனால் எப்போதாவது அரிதாக இதுபோல நடக்குமாம். இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது என்றும் விலங்கியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}