காசர்கோடு: கூகுள் மேப்பைப் பார்த்தபடி காரில் பயணித்த இருவர், தவறான பாதையில் போய், ஆற்றில் விழுந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்ல வேளையாக கார், ஆற்றோர மரத்தில் போய் சிக்கிக் கொண்டதால் இருவரும் உயிர் தப்பினர்.
காசர்கோடு மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இருவரையும் தீயணைப்புப் படையினர் வந்து மீட்டு பத்திரமாக கொண்டு வந்தனர். பள்ளஞ்சி என்ற இடத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்ன விசேஷம் என்றால், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மரத்தில் சிக்கிக் கொண்ட இருவரும் அவர்களே தீயணைப்புப் படையினருக்குப் போன் செய்து, லொக்கேஷனையும் அனுப்பி உதவி கோரியுள்ளனர். இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்துள்ளனர்.
அவர்களில் ஒருவரான அப்துல் ரஷீத் கூறுகையில், நாங்கள் கர்நாடகத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்குப் போவதற்காக காரில் கிளம்பினோம். வழி தெரியாது என்பதால் கூகுள் மேப்பைப் போட்டுக் கொண்டு பயணித்தோம். அதிகாலையில் கார் போய்க் கொண்டிருந்தபோது கூகுள் காட்டிய வழியில் சென்றோம்.
குறுகிய சாலையை கூகுள் மேப்ஸ் காட்டியது. அப்போதே நாங்கள் சுதாத்திருக்க வேண்டும். ஆனால் யோசிக்காமல் விட்டு விட்டோம். அந்தப் பாதை நேராக ஆற்றில் போய் முடிந்தது. முதலில் எதிர்த்தார் போல தண்ணீர் இருப்பதைப் பார்த்தோம். ஏதோ சாலையில் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் என நினைத்து விட்டோம். பிறகுதான் தெரிந்தது அது ஆறு என்று. எங்களால் தப்ப முடியவில்லை. கார் ஆற்றில் பாய்ந்து விட்டது. நல்ல வேளையாக ஆற்றோரமாக இருந்த மரத்தில் கார் சிக்கிக் கொண்டதால் நாங்கள் தப்பினோம்.
கார்க் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து அருகில் இருந்த மரத்தைப் பிடித்துக் கொண்டோம். பிறகு தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கூறி லொகேஷனையும் அனுப்பினோம். தீயணைப்புப் படையினர் வந்து கயிறு போட்டு எங்களை மீட்டனர். நாங்கள் உயிர் தப்புவோம் என்று முதலில் நினைக்கவே இல்லை. இதை மறு பிறப்பாக பார்க்கிறோம் என்றார் ரஷீத்.
அடிக்கடி இப்படி கூகுள் மேப்ஸ் தவறான வழியைக் காட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
{{comments.comment}}