டெல்லி: டெல்லியின் முதல்வராக பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இன்று பதவியேற்றார் ரேகா குப்தா. இவருக்கு துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக பெரும்பான்மைக்கு அதிகமாக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, அடுத்த டெல்லியின் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் உடனடியாக முதல்வர் தேர்வு செய்யப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது எம்எல்ஏக்கள் ஒருமனதாக ஷாலிமார்பாக் தொகுதியில் வெற்றி பெற்ற ரேகா குப்தாவை முதல்வர் வேட்பாளராகத் தேர்வு செய்தனர். பாஜக சார்பில் சுஷ்மா சுவராஜுக்குப் பிறகு, ரேகா குப்தா, டெல்லி முதல்வராகும் 2வது பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டெல்லியின் நான்காவது பெண் முதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
27 வருடங்களுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடித்த பாஜக சார்பில் முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா இன்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே பி நட்டா, ஆகியோர் முன்னிலையில் டெல்லியின் முதல்வராக பதவியேற்றார். துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.
Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!
Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?
மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?
Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!
தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!
அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!
Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?
கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!
{{comments.comment}}