இத்தாலியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு!

Mar 21, 2025,06:12 PM IST

ரோம்: துனிசியாவில் இருந்து 60 அகதிகளுடன் இத்தாலி நோக்கி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். இவ்வாறு பயணிக்கும் பெரும்பாலானோர் சட்ட விரோத பயணத்தையே மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு மேற்கொள்ளும் பயணங்கள் பெரும்பாலும் ஆபத்திலேயே முடிகின்றன. இதனைக் கட்டுப்படுத்த கடலோர போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இருப்பினும் இந்த சட்ட விரோத பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.




அந்த வகையில், வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து சட்ட விரோதமாக சுமார் 60 அகதிகளுடன் படகு ஒன்று இத்தாலி நோக்கி பயணித்தது. கடந்த 17ம் தேதி பயணத்தை தொடங்கிய படகை திடீர் என ராட்சத அலை தாக்கியது. இதில் அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து தகவறிந்த கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த படகில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்