சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்.. ஆரஞ்சு அலர்ட் மட்டுமே.. ஹேப்பி அண்ணாச்சி!

Oct 16, 2024,10:03 PM IST

சென்னை : சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் வாபஸ் பெற்றுள்ளது. இதனால் சென்னை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆரஞ்சு அலர்ட் மட்டும் விடுக்கப்பட்டுள்ளது.  இதனால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை வெளுத்து வாங்கி வந்தது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்தம், பிறகு காற்றழுத்த மண்டலமாக மாறி, பிறகு வலுவடைந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எனப்படும் மிக அதிக கனமழை எச்சரிக்கையும், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எனப்படும் அதிக கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டது.


ரெட் அலர்ட் வருவதற்கு முன்பிருந்தே சென்னையில் கனமழை பெய்து வந்தது. குறிப்பாக அக்டோபர் 14ம் தேதி இரவு துவங்கிய மழை, அக்டோபர் 16ம் தேதி காலை வரை நீடித்தது. இதனால் சென்னையில் பல பகுதிகள் நீரில் மூழ்கின. பால், பிரட், காய்கறிகள், குடி தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. பல பகுதிகளில் சுரங்க பாதைகளுக்குள் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. சில பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். 




வங்கடக் கடலில் உருவாக காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே அக்டோபர் 17ம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் கூறி இருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு 15 கி.மீ., தொலைவிலேயே இருந்து வந்ததால் ரெட் அலர்ட் வாபஸ் பெறாமல் இருந்தது. 


இது சலசலப்பை ஏற்படுத்தியது. சுத்தமாக மழையே இல்லை. பிறகு ஏன் ரெட் அலர்ட் என்று பலரும் கேள்வி எழுப்பினர். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அலர்ட் என்று வானிலை மையம் கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால் சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். பெரிய அளவில் மழை இருக்காது என்று ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்தது நினைவிருக்கலாம். 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்