ஏ.ஆர்.ரஹ்மான்- பிரபுதேவா இணையும் புதிய படம்.. சூப்பர் அப்டேட் வந்துருக்கு பாஸ்!

May 16, 2024,02:39 PM IST

சென்னை: ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை படக்குழு  வெளியிட்டுள்ளது.


25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்தில் இணைந்துள்ளனர். பிகைண்ட்வுட்ஸ் தயாரிப்பில் மனோஜ் என்.எஸ்.இயக்கத்தில் பிரபுதேவா, அஜூ வர்கிஸ், அர்ஜூன் அசோகன்,ரெடின் கிக்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, லொள்ளுசபா சாமிநாதன், குக்வித்கோமாளி தீபா  ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் காமெடி நடிகர் யோகி பாபு முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான்- பிரபுதேவா இணையும் ஆறாவது படம் இதுவாகும். இதற்கு arrpd-6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து உள்ளது. மார்ச் மாதம் தொடங்கிய இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.




ஏ.ஆர்.ரஹ்மான்- பிரபுதேவா 1994ம் ஆண்டு காதலன் படத்தின் மூலம் இணைந்தார்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதற்கு அடுத்து ஜென்டில்மேன், மிஸ்டர் ரோமியோ, லவ் பர்ட்ஸ், மின்சார கனவு உள்ளிட்ட படங்களில் இவர்கள் கூட்டணியில் வெளியான ஊர்வசி, முக்காபுலா, ரோமீயோ ஆட்டம் போட்டால், வெண்ணிலவே, பேட்ட ரேப் உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இந்த இருவரின் கூட்டணியில் இந்த முறை எந்த மாதிரியான பாடல்கள் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். மேலும், இந்த படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்