தோனி விக்கெட்டை வீழ்த்தியதை பெங்களூரு கொண்டாடியிருக்கக் கூடாது - மைக்கேல் வாகன்

May 19, 2024,12:56 PM IST

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள் சில கர்ட்டசியை கடைப்பிடிக்கத் தவறி விட்டதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே நேற்று மிக முக்கியமான ஐபிஎல் லீக் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் யார் வென்றாலும் அவர்களே பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்பதால் இரு அணிகளும் ஆவேசத்துடன் மோதின. இந்த மோதலில் பெங்களூரு அணியின் ஆவேசத்துடன் ஆக்ரோஷமும் சேர்ந்து கொண்டதால் சென்னை அணி தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.




சென்னை அணியும் கடைசி வரை விடாமல் போராடவே செய்தது. ஆனால் தோனி எப்போது அவுட் ஆனாரோ அப்போதே மனதளவில் சோர்ந்து போய் விட்டனர் சென்னை வீரர்கள். கடைசி 5 பந்தில் 11 ரன்கள் என்ற எளிதான இலக்கை அவர்களால் எட்ட முடியவில்லை என்பது பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.


தோனி நேற்று அட்டகாசமாக ஆடினார். ஒரு போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக விளக்கிக் காட்டினார் தனது பிரில்லியன்ட்டான பேட்டிங் மூலம். அவர் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்திற்கு வெளியே போனது. அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். அதற்குக் காரணம் அவர் அடித்த அந்த சிக்ஸர்தான். வெளியில் போன பந்துக்குப் பதிலாக புதிய பந்து எடுக்கப்பட்டதால் அந்தப் பந்து தோனியை பதம் பார்த்து விட்டது. ஒரு வேளை தோனி ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் பிளே ஆப்பில் இன்று சென்னை அணி இடம் பெற்றிருக்க வாய்ப்புண்டு.


இந்த நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் சில கருத்துக்களை கிரிக்ட்பஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், தோனி அவுட்டானதை பெங்களூரு கொண்டாடியிருக்கக் கூடாது. மாறாக அவரிடம் சென்று கை குலுக்கியிருக்க வேண்டும். காரணம் இது தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கலாம்.. அவரது கிரிக்கெட் வாழ்வில் கடைசி ஆட்டமாகவும் இது இருக்கலாம். ஆனால் இந்த இரண்டையும் ஆர்சிபி நேற்று செய்யவில்லை.


தோனி சாதாரண வீரர் அல்ல.. அவர் மிகப் பெரிய ஐக்கானிக் வீரர். அவர் போன்ற ஒரு வீரர் வருவது அரிதானது. எனவே அவரை ஆர்சிபி கெளரவப்படுத்தியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து என்று கூறியுள்ளார். இதை கருத்தையே கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளேவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்