சென்னை: தீபாவளி பண்டிகை, நவம்பர் 12ம் தேதி வருவதை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக நவம்பர் 5ம் தேதி ஞாயிறு அன்று ரேசன் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஆதலால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவுத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி தின விடுமுறையினை முன்னிட்டு, அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைக்க வேண்டும். இதனை முன்னிட்டு, வரும் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து இருக்கும்.
அதனால் தங்கள் கடைகளில் உள்ள அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை , உள்ளிட்ட பொருட்களை தேவையான அளவு இருப்பை ரேஷன் ஊழியர்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும். நவம்பர் 5ம் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளை ஈடுகட்டும் பொருட்டு, அடுத்து ஏதேனும் ஒரு நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும். அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
{{comments.comment}}