மும்பை: தான் நலமாக இருப்பதாகவும், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்தியாவின் முது பெரும் தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.
இந்தியாவின் மூத்த தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா உடல் நலக்குறைவு காரணமாக மும்பை ப்ரீச்கண்டி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால் அனைவரும் கவலை அடைந்தனர். மேலும் அவர் குறித்த செய்திகளும் வேகமாக பரவின.
இதையடுத்து ரத்தன் டாடா பெயரில் ஒரு விளக்கம் வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது உடல் நிலை குறித்து பல்வேறு வகையான வதந்திகள் பரவுவது குறித்து அறிந்தேன். அவை அனைத்தும் தவறு என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தற்போது எனது வயோதிகம் மறறும் அதுதொடர்பான உபாதைகள் காரணமான வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியத்துடன், மன வலிமையுடன் இருக்கிறேன்.
எனவே பொதுமக்களும், மீடியாக்களும் எனது உடல் நிலை குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ரத்தன் டாடா.
ரத்தன் டாடாவே விளக்கம் அளித்து விட்டதால் அவரது நலம் விரும்பிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் அவர் வீடு திரும்பவும் பிரார்த்திப்பதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}