ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தில் இடம் பெற்றுள்ள பாடலின் நடன மூவ்மென்ட்டை நடிகர் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு க்யூட்டாக நடிகை ராஷ்மிகா மந்தனா கற்றுத் தரும் வீடியோ கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பா படத்தின் 2வது பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை ஏற்கனவே வெளியிட்டு விட்டனர். 2வது சிங்கிள் இன்று முற்பகல் வெளியாகவுள்ளது. இந்தப் பாடலை ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். கிட்டத்தட்ட முதல் பாகத்தில் இடம் பெற்ற சாமி ஓ சாமி பாடலைப் போல இதுவும் பட்டையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் தம்பியும், நடிகருமான ஆனந்த் தேவரகொண்டாவுடன் இணைந்து ராஷ்மிகா கம் கம் கணேஷா என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டபோது புஷ்பா 2 படத்தில் இடம் பெற்ற சூசேகி பாடல் குறித்து கூறப்பட்டது. அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த ராஷ்மிகா அடுத்த செய்ததுதான் வைரலாகியுள்ளது.
அதாவது காம்பியர் இதுகுறித்துக் கூறியதைக் கேட்டு புன்னகைத்த ராஷ்மிகா, அதே வேகத்தில் ஆனந்த் தேவரகொண்டா பக்கம் திரும்பினார். அவரிடம் சூசேகி குறித்து தெரியுமா என்று கேட்ட அவர், அவருக்கு சைகையிலேயே அந்தப் பாடல் குறித்து விளக்கி மூவ்மென்ட்டையும் விளக்கினா சொல்லிக் கொடுத்தார். அவர் சொல்லச் சொல்ல அதைச் செய்து காட்டினார் ஆனந்த் தேவரகொண்டா.
இருவரும் இப்படி சைகையிலேயே பேசிக் கொண்டது செம க்யூட்டாக இருந்தது. இந்த வீடியோ இப்போது வைரலாகப் பரவி வருகிறது. ராஷ்மிகா என்ன செஞ்சாலும் வைரலாகி விடுகிறது!
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்
சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
விண்ணை பிளக்கும் உற்சாகத்துடன் வெளியான குட் பேட் அக்லி.. விழா கோலம்பூண்ட திரையரங்குகள்..!
Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு
{{comments.comment}}