அச்சச்சோ.. ராஷ்மிகாவுக்கு ஆக்சிடன்ட் ஆயிருச்சாம்.. இப்ப ஓகேவாம்.. லட்டு சாப்பிடறாங்களாம்!!

Sep 10, 2024,02:35 PM IST

மும்பை:   நடிகை ராஷ்மிகா மந்தன்னாவுக்கு சின்னதா ஆக்சிடன்ட் ஆயிருச்சாம். அதனால்தான் இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைப் பக்கங்களில் இடையில் அவரைக் காணோமாம். இப்ப சரியாயிட்டாராம்.


பான் இந்தியா நாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா. தமிழ், தெலுங்கு, இந்தி என்று புயல் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறார் புஷ்பா நாயகி. சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக வலம் வருபவர். ஆனால் சமீப காலமாக அதிகம் ஆக்டிவாக இல்லை. இதனால் ரசிகர்கள் என்னாச்சு என்ற கேள்விகளைக் கேட்டு வந்தனர்.


இதற்கான விளக்கத்தை ராஷ்மிகாவே கொடுத்துள்ளார். அது இதுதான்:




ஹாய் கய்ஸ்.. எப்படி இருக்கீங்க..  கொஞ்ச நாளை நான் இந்தப் பக்கம் வரலைன்னு உங்களுக்கு தெரியும்.  பொது வெளியில் கூட என்னை அதிகம் பார்த்திருக்க மாட்டீங்க. அதுக்கு என்ன காரணம்னா, கடந்த ஒரு மாசமா நான் வெளியில் தலை காட்டலை. சின்னதா ஒரு ஆக்சிடன்ட் ஆயிருச்சு. அதுதான் காரணம். ரொம்பெல்லாம் இல்லை, ரொம்ப சின்ன ஆக்சிடன்ட்தான்.


வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்து வந்தேன். டாக்டர்ஸ், அதிகம் அலட்டிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தனர். அதனாலதான் வர முடியல்லை. இப்போ நல்லாயிட்டேன். கொஞ்சம் பரவாயில்லை.  சூப்பர் ஆக்டிவாக மாறக் கூடிய தருணத்திற்கு வந்துட்டேன். எனது வேலைகளையும் செய்ய ஆரம்பிச்சிருக்கேன்.


எப்பவுமே உங்களை முதல்ல நல்லா பாத்துக்கங்க. வாழ்க்கை ரொம்ப ரொம்ப சின்னது, விரைவிலேயே முடிஞ்சுப் போகக் கூடியது. நாளைக்கு வருமான்னு தெரியாது.. ஸோ, இன்னிக்கு உள்ள நாளை சந்தோஷமா கழிங்க.


அப்புறம் காதைக் கொடுங்க.. இன்னொரு முக்கியமான விஷயம்.. இப்ப நிறைய லட்டு சாப்பிட்டுட்டு இருக்கேன் என்று கூறி கலகலப்பைக் கொடுத்துள்ளார் ராஷ்மிகா.


ஒரு லட்டு.. ஏகப்பட்ட லட்டுக்களை சாப்பிடுகிறதே.. அடடே ஆச்சரியக்குறி.. அப்படின்னு போய் அவங்க இன்ஸ்டா பக்கத்துல கவிதை எழுதுங்க ஓடுங்க ஓடுங்க!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்