பொசுக்குன்னு காலில் விழுந்த உதவியாளர்.. ஆடிப் போன ராஷ்மிகா மந்தனா!

Sep 04, 2023,01:11 PM IST
ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனா சற்றும் எதிர்பாராத செயலை அவரது உதவியாளர் சாய் செய்ததால் சற்றே ஆடிப் போய் விட்டார் ராஷ்மிகா.

புஷ்பா படம் மூலம் புகழின் உச்சிக்குப் போனவர் ராஷ்மிகா மந்தனா. அதேபோல விஜய்யுடன் வாரிசு படத்திலும் அசத்தியிருந்தார். ராஷ்மிகா மந்தனாவின் உதவியாளராக இருப்பவர் சாய். இவருக்கு ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது. சிறப்பு விருந்தினராக ராஷ்மிகா அழைக்கப்பட்டிருந்தார்.



தனது பணிகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு சாய் கல்யாணத்தில் கலந்து கொண்டார் ராஷ்மிகா.  கல்யாணத்தில் முழுமையாக கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார். 

அழகான ஆரஞ்சு நிற சேலையில் (சேலையோட விலை 35 ஆயிரமாம்) அட்டகாசமாக வந்திருந்தார் ராஷ்மிகா. திருமண விழாவில் சூப்பர் அட்ராக்ஷனாக காணப்பட்டார் ராஷ்மிகா. சாய்க்குத்தான் மிகப் பெரிய சந்தோஷம். தனது வேலைகளையெல்லாம் தனக்காக ஒதுக்கி வைத்து விட்ட வந்துள்ளாரே என்று நெகிழ்ந்து போய் விட்டார்.

ஆனால்  சாய் செய்த ஒரு செயலால் அப்படியே நெகிழ்ந்து போய் விட்டார் ராஷ்மிகா.  வாரிசு படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே பாடல் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்க, திருமண மேடைக்கு ராஷ்மிகா ஏறி வந்தார். பின்னர் மணமக்கள் மீது அட்சதை தூவி வாழ்த்தினார். அப்போது தனது புது மனைவியுடன் அப்படியே ராஷ்மிகா காலில் விழுந்து ஆசிர்வாதம் கேட்டார் மாப்பிள்ளை சாய். இதைப் பார்த்து ஆடிப் போன ராஷ்மிகா, பதறியபடி எழுந்திருங்க எழுந்திருங்க என்று கூறினார். மிகவும் நெகிழ்ச்சியாகி விட்டது ராஷ்மிகாவுக்கு. அதன் பின்னர் ராஷ்மிகா அவர்களுடன் சேர்ந்து நின்று சந்தோஷமாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.



ராஷ்மிகா தற்போது புஷ்பா 2, அனிமல் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இரண்டுமே பெரும் எதிர்பா்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படங்கள் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளன. இவை இரண்டும் வெளியாகும்போது அவருக்கு மீண்டும் மார்க்கெட் உச்சத்தைத் தொடும் என்றும் சொல்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்