கங்கை நதியோரம்.. காதலர் கரம் பிடித்த ரம்யா பாண்டியன்.. ஜோரான திருமணம்!

Nov 08, 2024,05:49 PM IST

சென்னை: ரிஷிகேஷில் உள்ள சிவ்புரி பகுதியில், கங்கை நதிக்கரையில் நடந்த கோலாகல திருமணத்தில், நடிகை ரம்யா பாண்டியன் - லொவல் தவான் தம்பதிகளின் காதல் இன்று கல்யாணத்தில் முடிந்தது. ரம்யா பாண்டியன் தம்பதிக்கு ரசிகர்கள், திரை நட்சத்திரங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


பொதுவாகவே நடிகர் நடிகைகள் சின்னத்திரையில் எவ்வளவு திறமைகளை வெளிப்படுத்தி நடித்தாலும் வெள்ளித்திரையில் ஒரு படம் அல்லது ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலே அவர்கள் மிகவும் பிரபலமானவர்களாக அறியப்படுகிறது. ஆனால் இங்கு சற்றே வித்தியாசமாக தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பல தரப்பிலும் பாராட்டுகள் பெற்றதோடு, படம் தேசிய விருதினையும் வென்றது.




இருப்பினும்சின்னத்திரையில் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவருக்கென்ற தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. பின்னர் ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.


இதற்கிடையே யோகா பயிற்சி மையத்தில் சேர்ந்த ரம்யா பாண்டியன் அங்கு தனக்கு பயிற்சியாளராக வந்த லொவல் தவான் என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் குடும்பத்திடம் தனது காதலை தெரிவித்து இரு வீட்டார் சம்மதத்துடன்  விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவியது.




இந்த நிலையில் ரிஷிகேஷில் இன்று ரம்யா பாண்டியன் திருமணம் நடந்தேறியது. உத்தரகண்ட் மாநிலம், டேராடூன் மாவட்டத்தில் இமய மலையின் அடிவாரத்தில் ரிஷிகேஷ் அமைந்திருக்கிறது. இமயமலையில் இருந்து கங்கை நீர் பாய ஆரம்பிக்கும் இடம்தான் ரிஷிகேஷ். இதனை சுற்றி பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புண்ணிய தலங்கள் உள்ளன. இந்த நான்கு தலங்களுக்கும் செல்லும் நுழைவாயிலாக இருப்பது ரிஷிகேஷ்தான். இந்த ஆற்றின் இரண்டு கரையோரங்களிலும் ஆசிரமங்களும் பல்வேறு சித்தர்களின் ஜீவ சமாதிகளும் இங்கு இருப்பதால் தல கங்கை பிறக்கும்  புண்ணிய பூமியாக ரிஷிகேஷ் விளங்குகிறது. 


அப்படிப்பட்ட புண்ணிய பூமியான சிவ்புரி கங்கை ந்திக்கரையில் நடிகை ரம்யா பாண்டியன் தனது காதலன் லொவல் தவானை கரம் பிடித்துள்ளார். இந்த திருமணத்தில் மணமக்களுடன் ரம்யாவின் சித்தப்பா அருண்பாண்டியன் (நடிகை கீர்த்தி பாண்டியன் தந்தை), அம்மா சாந்தி துரைப்பாண்டி மற்றும் தாய் மாமா கணேஷ்குமார் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர் . இயற்கை எழில் கொஞ்சும் கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியன் மற்றும் லொவன் தவான் தம்பதிகள் திருமணம் செய்து கொள்ளும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில்  வைரலாகி வருகிறது. இதனை பார்த்துவிட்டு ரசிகர்கள்  இந்த தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்