"ஒரே நாடு ஒரே தேர்தல்".. ராம்நாத் கோவிந்த் அன்றே சொல்லிட்டாரே!

Sep 03, 2023,10:04 AM IST
டெல்லி: குடியரசுத் தலைவராக பதவி வகித்தபோதே, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தை வலியுறுத்திப் பேசியவர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை தற்போது பாஜக கையில் எடுத்துள்ளது. அதாவது நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போதே மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது என்பது பாஜகவின் திட்டம். இந்தத் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், பல்வேறு நிபுணர்கள் கடும் ஆட்சேபனையும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.



ஆனால் இதுகுறித்து முடிவெடுக்க ஒரு உயர் மட்டக் கமிட்டியை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்தக் கமிட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா,  லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அதிர்ரஞ்சன் செளத்ரி ஆகியோர் உள்ளிட்ட உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் எட்டு பேர் கொண்ட குழுவாக இது அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழு என்ன மாதிரியான பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கப் போகிறது என்பது ஒரு எதிர்பார்ப்புக்குரியதாக உள்ள  நிலையில் குழுவின் தலைவரான ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராக இருந்தபோது என்ன சொல்லியிருந்தார் என்ற பேச்சு இப்போது வைரலாகி வருகிறது.

2018ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் பேசும்போது, இந்தியாவில் ஏதாவது ஒரு பகுதியில் அவ்வப்போது ஏதாவது தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது. இது மக்களை சோர்வடையச் செய்கிறது, கவலைக்குள்ளாக்குகிறது. இது நமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியையும் பாதிப்படையச் செய்கிறது.

அடிக்கடி தேர்தல் நடத்துவது  தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கும் பெரும் சோர்வைக் கொடுக்கும். மனித வளம் வீணாக்கப்படும்.  வளர்ச்சித் திட்டங்களையும் நம்மால் செய்ய முடியாமல் போகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ற பெயரில் முட்டுக்கட்டைகளும் ஏற்படுகின்றன. எனவே ஒரே நேரத்தில் அனைத்துத் தேர்தல்களையும் நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கூறியிருந்தார் ராம்நாத் கோவிந்த்.

அப்போதே ராம்நாத் கோவிந்த் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்த நிலையில் தற்போது அதே பாணியிலான முடிவுக்குத்தான் இந்தக் கமிட்டியின் கருத்தும் அமையும் என்று கருதப்படுகிறது. மேலும் குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் கருத்தும் மத்திய அரசுக்கு சாதகமாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்