டெல்லி: சகோதரி பிரியங்கா காந்தியுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உடையாத அன்பை பறைசாற்றும் பண்டிகை ரக்ஷா பந்தன் என தன் சகோதரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வரும் பௌர்ணமி அன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தமது சகோதரர்களுக்கு கையின் மணிக்கட்டில் மஞ்சள் கயிறு கட்டுவது இப்பண்டிகையின் சிறப்பாகும். இக்கயிறை ராக்கி என அழைப்பர். இந்த ராக்கி கயிறு கட்டியவுடனேயே பெண்களுக்கு தன் சகோதரர்கள் பணம் அல்லது பரிசு வழங்குவது வழக்கம்.
ஒவ்வொரு வருடமும் வட மாநிலங்களில் இப்பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது தமிழர்களும் இப்பண்டிகையை இந்து பண்டிகையாக கருதாமல் சமுதாயப் பண்டிகைகளாக எண்ணி கொண்டாடி வருகின்றனர். இன்று அதாவது ஆகஸ்ட் 19ஆம் தேதி பெண்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டும் தினமான ரக்ஷா பந்தன் தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ரக்ஷாபந்தன் தினத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரக்ஷா பந்தன் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன்,தங்கைக்கு இடையிலான உடைக்க முடியாத அன்பையும் பாசத்தையும் பறைசாற்றும் ஒரு பண்டிகை ரக்ஷா பந்தன். பாதுகாப்புக் கயிறு, எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுப்படுத்தட்டும் என பதிவிட்டு தனது சகோதரியான பிரியங்கா காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதே போல பிரியங்கா காந்தி ராகுல் காந்திக்கு ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான உறவு ஒரு பூச்செடி போன்றது. அதில் வெவ்வேறு வண்ணங்களின் நினைவுகள், ஒற்றுமையின் கதைகள் மற்றும் நட்பை ஆழமாக்குவதற்கான மரியாதை ஆகியவை அன்பு மற்றும் பரஸ்பர புரிதலின் அடித்தளத்தில் செழித்து வளரும் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு சிறுமிகள் சேர்ந்து ராக்கி கட்டி மகிழ்ந்தனர். அதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பிரம்மகுமாரிகள் இயக்க சகோதரிகள் ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}