Thalaivar 170: பனகுடி பக்கம் ரஜினிகாந்த் வந்தாரே பார்த்தீங்களா?

Oct 11, 2023,01:41 PM IST
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்து வருகிறது. பனகுடி பக்கம் நடந்த ஷூட்டிங்கிற்கு ரஜினிகாந்த் வந்திருந்தார். அவரைப் பார்க்க மக்கள் கூடி விட்டனர்.

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் சூப்பர் டூப்பர் வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த படத்தின் வேலைகளில் ரஜினி தற்பொழுது இறங்கி விட்டார். 

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில்,  ஞானவேல் இயக்கத்தில் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது தலைவர் 170. இப்படத்திற்கானபூஜை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் அங்கு  படப்பிடிப்பு கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது.



இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு நெல்லை,  கன்னியாகுமரி மாவட்டங்களில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில்  அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா, துசாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் நடிக்கின்றனர்.

பனகுடியில் ஆர் எம் எஸ் ஓடு தொழிற்சாலையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.  ரஜினி வருகையை அறிந்து ரசிகர்கள் அங்கு கூட்டமாக கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. ரஜினிகாந்த் படப்பிடிப்பு நடைபெறுவதையொட்டி ஓடு தொழிற்சாலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

முன்னதாக காரில் வந்த ரஜினி காந்த் ரசிகர்களை பார்த்து கை அசைத்து விட்டு சென்றதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்