"வேட்டையன்" ரஜினி  தூக்கிப் போட்டதும்.. டக்குன்னு போய் உக்காந்துச்சே.. அது என்ன கண்ணாடி தெரியுமா?

Dec 13, 2023,06:11 PM IST

சென்னை: ரஜினிகாந்த் ஒரு ஸ்டைல் மன்னன் என்று உலகுக்கே தெரியும்.. அவர் செய்யும் ஒவ்வொரு ஸ்டைலும் முத்திரை பதிக்கும்.. அந்த வகையில் வேட்டையன் படத்தில் அவர் காட்டிய ஒரு ஸ்டைல் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது.. பளிச்சென பலரது மனதையும் உடனே கவர்ந்து விட்டது.


அது.. கூலர் கண்ணாடியை தூக்கிப் போட்டதும் அது போய் அவரரது கண்களில் இருந்த பிரேமில் உட்கார்ந்ததுதான்.  இந்த ஸ்டைல் இதுவரை அவர் செய்திராதது, சினிமாக்களில் யாரும் செய்து பார்த்திராதது.. ஆனால் இது புதிய மேட்டர் கிடையாது.. ஏற்கனவே இருக்கும் ஒரு புதிய டெக்னாலஜிதான்.. ஆனால் ரஜினிகாந்த் செய்ததால் அது ஸ்டைல் மேட்டராகி விட்டது.


ரஜினி தூக்கிப் போட்டு கண்ணில் உட்கார்ந்தது ஒரு Magentic Eye Glass ஆகும். இது ஏற்கனவே பாப்புலராக உள்ள விஷயம்தான். இந்த வகை கண்ணாடிகளில் பிரேமும், கிளாஸும் தனித் தனியாகவே இருக்கும். தேவை என்றால் கிளாஸை தனியாக எடுத்து விட முடியும். தேவைப்படும் நேரத்தில் பிரேமில் பொருத்திக் கொள்ள முடியும். 




இந்த வகை கண்ணாடிகளின் பிரேமில் இரண்டு பகுதிகள் இருக்கும். அதாவது டாப் பிரேம் மற்றும் பேஸ் பிரேம். இதில் டாப் பிரேமுக்கும், பேஸ் பிரேமுக்கும் இடையே ஈர்ப்பு கிடைக்கும் வகையில் சிறு சிறு காந்தங்கள் பொருத்தப்பட்டிருக்கும். மிகவும் நுன்னிய காந்தங்கள் இவை. இந்த காந்தங்களின் ஈர்ப்பு காரணமாகத்தான் கிளாஸை இதில் பொருத்தும்போது அது கச்சிதமாக பொருந்திக் கொள்ளும்.


இந்த பிரேம் மிக மிக லேசான எடை கொண்டது என்பது இதன் விசேஷமாகும். கண்ணாடியை பிரேமுக்கு அருகில் கொண்டு வந்தாலே அது போய் கச்சிதமாக பிரேமுக்குள் உட்கார்ந்து கொள்ளும். அதற்கேற்ற வகையில் அந்தக் கண்ணாடியும் வடிவமைக்கப்பட்டிருக்கும். 




இந்த வகை கண்ணாடியைத்தான் சூப்பர் ஸ்டார் தனது வேட்டையன் படத்தில் பயன்படுத்தியுள்ளார். ஆனால் சொல்வதற்கு இது ஈசிதான்.. ஆனால் ரஜினி தூக்கிப் போட்டது போல போட்டு கண்ணாடியை பிரேமுக்குள் உட்கார வைப்பதுதான் கஷ்டம்.. ஆனால் அது ரஜினிக்கு கண்டிப்பாக கஷ்டம் இல்லை.. அவர்தான் ரஜினி "காந்தம்" ஆச்சே!

சமீபத்திய செய்திகள்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

அதிகம் பார்க்கும் செய்திகள்