"தலைவா, இறைவான்னு கத்தறாங்க.. சாமி கும்பிட முடியலை".. கொந்தளித்த ரஜினிகாந்த் பக்கத்து வீட்டுக்காரர்!

Jan 15, 2024,04:08 PM IST

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தைப் பார்க்க அவரது வீடு உள்ள பகுதியில் கூடிய ரசிகர்கள் கூட்டத்தால் கடுப்பாகிப் போன பக்கத்து வீட்டுக்காரப் பெண்மணி இவர்களால் எங்க நிம்மதியே போச்சு, சாமி கூட கும்பிட முடியவில்லை என்று கூறி கோபத்தில் கொந்தளித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரஜினிகாந்த் வீட்டைத் திறந்து எல்லோரையும் உள்ளே விட வேண்டியதுதானே.. இப்படி வீட்டு முன்பு காலங்கார்த்தால கூடினால் எங்களால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் என்றும் அப்பெண்மணி ஆதங்கத்துடன் கூறினார்.


ரஜினிகாந்த்தைப் பார்க்க விசேஷ நாட்களில் அவரது வீட்டுக்கு முன்பு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடுவது வழக்கமாகி வருகிறது. ரஜினிகாந்த் வீட்டு முன்பு போய் நின்று கொண்டு தலைவா தலைவா என்று கத்துவது ரசிகர்களின் வழக்கமாகி வருகிறது. சில நேரங்களில் அவர் வீட்டுக்குள் நின்றபடி பெரிய ஸ்டூலில் ஏறி நின்று கை காட்டுவார் அல்லது சில நேரம் கேட்டுக்கு வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்து கை ஆட்டி விட்டுப் போவார்.




இந்த நிலையில் இன்று ரஜினி ரசிகர்கள் கூட்டத்தால் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்மணி கொந்தளித்து விட்டார். நல்ல நாளும் அதுவுமாக வீட்டுமுன்பு இப்படிக் கூடி நிம்மதியாக சாமி கூட கும்பிட முடியவில்லை என்று அவர் புலம்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து வயதான அப்பெண்மணி கூறுகையில், ஒவ்வொரு விசேஷத்தின்போதும் இப்படி ரசிகர்கள் கூடுகிறார்கள். தலைவா, இறைவா அப்படின்னு கத்திக் கூச்சல் போடறாங்க.. இவர்களால் எங்களைப் போல 21 வீடுகள் பாதிக்கப்படுது. அவரைப் பார்க்க வர்ற கூட்டத்தால, எங்க கேட் எப்பவும் மூடியே இருக்கணுமா.. அவங்க கேட்டைத் திறந்து உள்ளே விடுங்க.  வாட் இஸ் திஸ்.. எல்லோரையும் உள்ளே விடுங்க. அப்ப நான் பார்க்கிறேன்.


உங்க கேட்டைத் திறந்து எல்லோரையும் உள்ளே விடுங்க.. தலைவர் வீட்டைப் பார்க்கட்டும்.. அன்னிக்கு அந்தம்மா ராத்திரி 10 மணிக்கு பிரஸ் கான்பரன்ஸ் கொடுத்தாங்கள்ள..  நாங்களும் டாக்ஸ் கட்டறோம்.. எல்லாம் கட்டறோம்.. ஆனால் ஒரு அட்வான்டேஜும் கிடையாது.. போதாதகுறைக்கு பண்டிகையின்போது, எர்லி மார்னிங் இப்படி கூட்டம் போட்டா பிரே பண்ண முடியாது.. ஒன்னும் பண்ண முடியாது.. We are fed up.. just fed up.. என்று அவர் ஆவேசமாக கூறினார்.


பக்கத்து வீட்டுக்காரர்கள் கடும் அப்செட்


ரஜினிகாந்த் ரசிகர்களால், அவரது பக்கத்து வீட்டுக்காரர்களே அப்செட் ஆகியிருப்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீண்ட காலமாகவே ரசிகர்கள் கூட்டம் காரணமாக அக்கம் பக்கத்தினர் பாதிக்கப்படுவதாகவும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இதை சரி செய்ய ரஜினியே தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேசாமல் இதுபோன்ற தருணங்களில் தனது ராகவேந்திர கல்யாண மண்டபத்திற்கு ரஜினிகாந்த் விசிட் அடித்தால், அங்கு வந்து அவரை ரசிகர்கள் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்.. யாருக்கும் பிரச்சினையும் வராது.. இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பு யோசிக்க வேண்டும்.


இதுபோன்ற பிரச்சினை ரஜினிகாந்த் ரசிகர்களால் மட்டும் ஏற்படுவதில்லை. மாறாக அத்தனை பிரபலமான நடிகர்களின் ரசிகர்களாலும், அந்தந்த நடிகர்களுக்கு ஏற்படும் சங்கடம்தான் இது. வீடுகளுக்குப் போய் குவிவதால் அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு நிச்சயம் அசவுகரியம் ஏற்படும் என்பதை யாருமே உணர்வதில்லை. அவர்களும் நம்மைப் போலத்தான்.. அவர்களும் பண்டிகை கொண்டாட வேண்டும், வெளியில் போக வேண்டும், வாகனங்களை எடுக்க வேண்டும்.. அவர்களது வீடுகளிலும் வயதானவர்கள் இருப்பார்கள், கைக்குழந்தைகள் இருப்பார்கள்.. சத்தம் போட்டால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதை பெரும்பாலான நடிகர்களின் ரசிகர்கள் உணர்வதில்லை.


ரசிகர்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை


நடிகர்களைப் பார்க்கப் போக வேண்டியதுதான்.. ஆனால் அப்படிப் போகும் சுய கட்டுப்பாட்டுடன் நடக்க ரசிகர்கள் முன்வர வேண்டும். அக்கம் பக்கத்தினரின் வீட்டு வாசலை அடைத்துக் கொண்டு போய் நிற்பது, அவர்களது கஷ்டம்  தருவது போல நடப்பது.. சத்தம் போடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இதை நடிகர்களே வந்து சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்காமல் இவர்களே செய்தால் இதுபோன்ற தர்மசங்கடங்கள் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு ஏற்படுவதை  தவிர்க்கலாம்.


இந்தப் பெண்மணி Fed up என்ற வார்த்தையை அத்தனை ஆதங்கமாக சொல்வதைப் பார்த்தால் நீண்ட காலமாகவே அந்தக் குடும்பம் பாதிக்கப்பட்டிருப்பது போலத் தெரிகிறது. இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போலத்தான்.. அனேகமாக அத்தனை முன்னணி நடிகர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களும் கூட இதுபோல பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள்!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்