HBD Rajinikanth.. 75வது பிறந்த நாள்.. தலைவர்கள், திரையுலகின் வாழ்த்து மழையில் சூப்பர் ஸ்டார் ரஜினி

Dec 12, 2024,11:32 AM IST

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் திரை உலகினர் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


சூப்பர் ஸ்டாரின் கோடான கோடி ரசிகர்கள் ஹாப்பி பர்த்டே தலைவா என பதிவிட்டு கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். முதல்வர் மு க ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.




கர்நாடகத்தில் பிறந்து தமிழ்நாட்டில் சூப்பர்ஸ்டாராக மாறி,  கோடான கோடி ரசிகர்களின் இதயங்களை வென்றவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவருடைய மாஸான ஸ்டைல்கள்தான். 90 காலகட்டத்தில் ரஜினி என்ற அடையாளம் காணப்பட்டதே இவருடைய ஸ்டைலான நடிப்புதான். அதிலும் நினைத்தாலே இனிக்கும், பில்லா, முரட்டுக்காளை, கர்ஜனை, காளி தொடங்கி பின்னாளில், பாட்ஷா, அருணாச்சலம், அண்ணாமலை, முத்து, படையப்பா, வீரா, எஜமான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் சூப்பர் ஸ்டாரின் எதார்த்தமான நடிப்பு, முக பாவனை, தோற்றம், ஸ்டைல், மாசான வசனங்கள் என ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. 


ரசிகர்கள் இவரை சூப்பர் ஸ்டார் என கொண்டாடி வருகின்றனர். இவர் புகழ் இன்று வரை ஓங்கி நிற்க இவரின் திறமைகளே அச்சாணியாக திகழ்கின்றன. இதனால் தற்போது வரை சூப்பர் ஸ்டார் தனது நடிப்பின் திறமையை நிரூபித்துக் கொண்டே வருகிறார்.  பெங்களூரில் 1950ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி பிறந்த ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


முதல்வர் மு க ஸ்டாலின்:


எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் திரு.  ரஜினிகாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன் என பதிவிட்டுள்ளார்.


தவெக தலைவர் விஜய்:




பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் திரு.  ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:


அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மென்மேலும் பல வெற்றிகள் பெருக. நலம் சூழ்க. மகிழ்ச்சி நிறைக. நீடு வாழ்க என பதிவிட்டுள்ளார்.


நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்:


எவரையும் கவர்ந்திழுக்கும் ஈர்ப்புமிக்க நடிப்பாற்றலாலும், தனித்துவமிக்க நடை, உடை, பாவனைகளாலும், நேர்த்தியான உடல்மொழியாலும் மக்கள் மனதை வென்று, இந்தியத் திரையுலகை தமிழ்நாட்டை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த திரை ஆளுமை!


திரைத்துறையில் இருந்த நிற ஆதிக்கத்தை உடைத்துத் தகர்த்து, தனது ஆகச்சிறந்த நடிப்பால் அனைவரையும் தன்வசப்படுத்தி, திரை வானில் மிளிரும் உச்ச நட்சத்திரம்!


காலங்கடந்தும் ரசிக்கும்படியான நடிப்பினைக் கொடுத்து, மூன்று தலைமுறையினரை மகிழ்வித்த ஆகப்பெரும் திரைக்கலைஞர்!


பணம், புகழ், பெயர், செல்வாக்கு என எல்லாவற்றிலும் உச்சம் தொட்டாலும், அவற்றைத் துளியும் தலைக்கேற்றாது பணிவோடும், திறந்த மனதோடும் எல்லோரையும் அணுகும்  தன் நிலை எந்நாளும் மாறாத பெருமகன்!


பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.


அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி: 


தன் தனித்துவமான நடிப்பாற்றலால் உலகளாவிய ரசிகர் பட்டாளம் கொண்டவரும், என்றும் பழகுவதற்கு இனியவருமான அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் திரு.  ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


திரையுலக வாழ்வில் பொன்விழா ஆண்டில் உள்ள அன்பு நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்கள், இன்னும் பல்லாண்டு பூரண உடல் நலத்துடன் ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.


பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:


நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று 75-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.


கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஹர்பஜன்சிங்:


உச்சத்தின் உச்சத்தில் தனக்கென தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொண்டு. இனி உச்சத்தில் மிச்சம் எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு உச்சம் தொட்ட உச்ச நட்சத்திரமே, அன்பு தலைவா  ரஜினிகாந்த் அவர்களுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.


அதேபோல் தமாகா தலைவர் ஜி கே வாசன், திமுக எம்பி தயாநிதி மாறன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!

news

Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!

news

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய விலை என்ன தெரியுமா?

news

Gold rate.. ஏற்றமும் இல்லை, இறக்கமும் இல்லை... தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

news

இயக்குநர் சீனு ராமசாமியும் டைவர்ஸ்.. 17 வருட திருமண வாழ்விலிருந்து விடைபெறுவதாக அறிவிப்பு!

news

HBD Rajinikanth.. 75வது பிறந்த நாள்.. தலைவர்கள், திரையுலகின் வாழ்த்து மழையில் சூப்பர் ஸ்டார் ரஜினி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 12, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!

news

கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்