இலங்கை பொருளாதார சீரழிவுக்கு.. ராஜபக்சே சகோதரர்களே காரணம்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Nov 15, 2023,09:12 AM IST

கொழும்பு: இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்து போனதற்கு முன்னாள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று இலங்கை சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.


2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு காலகட்டத்தில் பொருளாதாரத்தை சரிவர கையாளாமல், மக்களின் அடிப்படைகளை மீறும் வகையில் அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே நடந்து கொண்டதாகவும் கோர்ட் கூறியுள்ளது.




தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா, நீதிபதிகள் புவனகா அலுவிஹாரே, விஜித் மலகோடா, முருது பெர்னாண்டோ ஆகியோர் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராகவும், நீதிபதி பிரியந்தா ஜெயவர்த்தனா ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர். இருப்பினும் ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் பெரும்பான்மையான தீர்ப்பு அளித்துள்ளனர்.


கோத்தபயா ராஜபக்சே தவிர முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, மத்திய வங்கி மானிட்டரி போர்டு, முன்னாள் நிதித்துறை செயலாளர் ஜெயசுந்தரா, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் ஆகியோரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


கோத்தபயா ராஜபக்சே அதிபராக இருந்தபோது பெரும் பெரும் தொழிலதிபர்களுக்கு ரூ. 681 கோடி வரிச் சலுகை அளிக்கப்பட்டதைக் கோர்ட் கண்டித்துள்ளது.  அதுதான் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைய ஆரம்பப் புள்ளி என்று அது கூறியுள்ளது.


சர்வதேச நிதியத்திடமிருந்து விரைவாக கடன் பெறத் தவறியது, இலங்கையின் ரூபாய் மதிப்பு சரியத் தொடங்கியதைத் தடுக்கத் தவறியது ஆகியவையும் கூட கோத்தபயா ராஜபக்சே அரசின் மிகப் பெரிய தவறாக சுப்ரீம் கோர்ட் சுட்டிக் காட்டியுள்ளது.


சமூகத்தின் பல்வேறு அங்கத்தினர் இணைந்து ராஜபக்சே சகோதரர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. மனுதாரர்களுக்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலா ரூ. 1.50 லட்சம் நஷ்ட ஈடு தரவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்