சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக இந்த மாத இறுதிக்குள் படிப்படியாக மழை அளவு அதிகரிக்கும். அதே வேளையில் படிப்படியாக வெயிலின் தாக்கமும் குறையும் என தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயில் காலமா என மக்கள் அச்சப்படும் அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போது வடகடலோர மாவட்டங்களான சென்னை செங்கல்பட்டு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பொழிந்து வருகிறது. அதேசமயம், தென் தமிழ்நாட்டில் வெயில் பெரிதாக குறையவில்லை. எப்படா வெயில் குறையும் என்று வியர்க்க விறுவிறுக்க காத்துக் கிடக்கின்றனர்.
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் தற்போது தமிழ்நாட்டில் நிலவும் வெயில் மழை குறித்து வெளியிட்டுள்ள கணிப்புகளைப் பார்க்கலாம்.
வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி:
எதிர்பார்த்தபடியே வங்ககடலில் வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு சுழற்சியாக கடலுடன் இணைந்தது. அதாவது தாழ்வு பகுதி கிடையாது. அதற்கு முதல் நிலை. இந்த சுழற்சியானது அந்தமான் கடற்கரை முதல் ஆந்திரா கடற்கரை வரையிலும் வட கடலோரத்தையும் இணைத்து கொண்டிருக்கிறது. மேற்கு மத்திய வங்க கடல், வடக் கடலோரம், தெற்கு ஆந்திரா, மத்திய ஆந்திரா முதல் மத்திய பிரதேசம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அமைப்பு இது. கீழடுக்கிலும் இணைந்திருக்கிறது. இந்த இரு காற்று இணைவும் எங்கு ஏற்படுகிறது என்றால், செங்கல்பட்டு மற்றும் சென்னையை ஒட்டி உள்ள பகுதிகளில் இந்த இரு காற்று இணைவு ஏற்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சோழிங்கநல்லூரில் 169 மில்லி மீட்டர் மழை பொழிந்து இருக்கிறதாக தகவல் கிடைத்துள்ளது. உத்தண்டியில் 39 மில்லி மீட்டர், ஆலந்தூர் 28 மில்லி மீட்டர், வளசரவாக்கம் 25 மில்லிமீட்டர், அடையாறு 24 மில்லி மீட்டர்,ராயபுரம்,
வானகரம் தலா 16 மில்லி மீட்டர், மணலி, பெருங்குடியில் தலா 15 மி.மீட்டர்,அண்ணா நகர், மற்றும் மவுலிவாக்கத்தில் தலா 12 மில்லி மீட்டர், திரு.வி.க, தேனாம்பேட்டை, மற்றும் மணலியில் தலா 9 மில்லி மீட்டர், கத்திவாக்கம் 8 மில்லி மீட்டர், மீனம்பாக்கம் மற்றும் திருவெற்றியூரில் தலா 7 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆங்காங்கே மழை பொழிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக தென் சென்னை பகுதிகளில் 35 மில்லி மீட்டர் முதல் 60 மில்லி மீட்டர் வரை மழை பொழிந்துள்ளது.
காற்று சுழற்சி தெற்கு ஆந்திரா முதல் வட தமிழகத்தை ஒட்டிய பகுதி முதல் அந்தமான் வடக்கு பகுதி வரை நீடித்திருக்கிறது. இது படிப்படியாக தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக தாழ்வு, தாழ்வு மண்டலமாக, மத்திய ஆந்திரா கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த வளிமண்டல சுழற்சி ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய ஆந்திரா பகுதியில் கரையை கடக்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. அதிகபட்சமாக வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா பகுதிகளில் கரையை கடக்கவும் வாய்ப்புள்ளது.
வட கடலோரப் பகுதிகளில் நல்ல மழை:
இதன் எதிரொலியாக சென்னையை ஒட்டி நீடித்துக் கொண்டிருக்கும் இந்த காற்று சுழற்சி காரணமாக வடக்கடலோர தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதாவது திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, மாவட்ட பகுதிகளில் காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கொஞ்சம் கொஞ்சமாக மேகமூட்டம் விலகும். மீண்டும் மாலையில் மேகம் சூழ்ந்துவிடும். இன்று முதல் இந்த மாத இறுதிக்குள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும்.
இந்த நிகழ்வுகள் வரும் 25ம் தேதி வரை ஆந்திர கடற்கரை பகுதிகளில் நீடித்துக் கொண்டிருக்கும் என்பதால் இருகாற்று இணைவு என்பது கண்டிப்பாக வட கடலோரத்தில் இருக்கும். இதனால் திருவள்ளூர்,சென்னை, செங்கல்பட்டில், மழை பெய்யும். பின்னர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மற்றும் காஞ்சிபுரம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மாவட்டங்கள் வரை மழைப் பொழிவு இருக்கும். கண்டிப்பாக மழைப்பொழிவு இருக்கும். ஆனால் மாலை இரவு நள்ளிரவு அதிகாலை வேலையில் தான் மழை பொழிவு இருக்கும். பொழுது விடியும் போது மேகமூட்டம் இருக்கும். பொழுது விடிந்த பிறகு படிப்படியாக மேகம் கலையும்.
மாலை இரவு மழைக்கு எங்கிருந்து சாதகம் ஏற்படுகிறது என்றால் வட மேற்கிலிருந்து கர்நாடகா மகாராஷ்ட்ரா ஆந்திர பிரதேசம் தெலுங்கானா பகுதிகளில் இருந்து வரக்கூடிய வெப்பமடைந்த காற்று, தமிழ்நாட்டில் கடலோரத்தில் வங்க கடலில் இறங்கும் பொழுது மேற்கிலிருந்து அதாவது பாலக்காட்டு கணவாய் மற்றும் மைசூர் வழியாக மேற்கிலிருந்து வரக்கூடிய காற்று மற்றும் வடமேற்கிலிருந்து வெப்பச்சலனம் காரணமாக வரக்கூடிய காற்று இரண்டும் வடகடலோர பகுதிகளில் இணையும் போது இருகாற்று இணைவால் மழை மேகங்களை உற்பத்தி செய்து,மாலையில் இடியுடன் கூடிய மழையை கொடுக்கும். உறுதியாக மழையை கொடுக்கும். ஆனால் அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டத்தின் தெற்கு பகுதி மற்றும் மயிலாடுதுறையில் இன்று மழை பெய்யும் என்றால் உறுதி இல்லை.
23, 24ம் தேதிகளில் காவிரி டெல்டாவில் மழை:
வடக்கே புதுச்சேரி திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, வரைக்கும் மழைப்பொழிவு இருக்கும். இதில் உறுதியாக புதுச்சேரிக்கும் சென்னைக்கு இடையே நூறு சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 23 மற்றும் 24 தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கலாம். குறிப்பாக வடக்கு டெல்டா பகுதிகளில் மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் அதனை ஒட்டிய பகுதிகளில், திருவாரூர் வடக்கே வடங்கிமான் மற்றும் கொடைவாசல் பகுதிகளில் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக தான் இருகாற்று இணைவின் போது தெற்கு வடக்காக மழை தீவிரமடையும். தீவிர மடையும் போது வடமேற்கு காற்று சென்னையில் இறங்கும், காரைக்காலிலும் 23, 24 தேதிகளில் இறங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
வங்கக் கடலில் உள்ள இரு காற்று இணைவு முதலில் வடகடலோரத்திற்கும் படிப்படியாக உள் மாவட்டங்களுக்கும், பின்னர் வடகடலோரத்தை ஒட்டிய டெல்டாவின் வடக்கு பகுதிக்கு தொடங்கி வடக்கேயும், பின்னர் 23ஆம் தேதியிலிருந்து டெல்டாவிற்கும் பிறகு மாத இறுதியில் இலங்கை மற்றும் தமிழ்நாடு அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி மேலடுக்கில் ஏற்படுத்தப் போகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இடையடுக்கு சுழற்சி என்று இந்த மாத இறுதியில் ஏற்படுத்தப் போகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி அமைந்து மாலை இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை பொழியும்.
கேரளா மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், என்று ஆங்காங்கே இந்த மாத இறுதி முதல் நல்ல மழை பொழிவு கிடைக்கும். அக்டோபர் 1 முதல் 5 வரை நல்ல மழைப்பொழிவை கொடுக்கும். படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும். படிப்படியாக மழைப்பொழிவு பரவலாக அதிகரிக்கும்.
சென்னைக்கு வெயிலின் தாக்கம் குறைந்து இருக்கும். படிப்படியாக தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கமும் குறைய வாய்ப்புள்ளது. இருந்தாலும் மாலை இரவு நேரம் மழை பொழிவு தான். கேரளா எல்லையோர பகுதிகளுக்கும், மேற்கு மாவட்டங்களுக்கும், தென் மாவட்ட பகுதிகளுக்கும் மாத இறுதியில் மழைப்பொழிவு இருக்கும் என அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரையில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.11.9 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
விஜய்க்கு கோபம் வருவதற்காக தான் அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?: டாக்டர் தமிழிசை
Deepavali special.. மொறுமொறுன்னு.. சாப்பிட்டா விறுவிறுன்னு.. ரிப்பன் பூண்டு பக்கோடா!
தமிழ்நாட்டில் மழை.. தீபாவளியன்னிக்கு யாருக்கெல்லாம் கன மழை காத்திருக்கு.. லிஸ்ட்டைப் பாருங்க!
முத்திரை பதித்த பேரரசர்.. அரசியலின் முக்கிய அடையாளம்.. பசும்பொன் தேவருக்கு விஜய் புகழாரம்
டக்குன்னு அஜீத் பக்கம் திரும்பிய உதயநிதி ஸ்டாலின்.. கடகடவென பாலோ செய்த அமைச்சர்கள்!
Chennai Rains.. அண்ணாநகரை வச்சு செஞ்ச மழை.. 1 மணி நேரத்தில் 100 மி.மீ.. இது லிஸ்ட்லேயே இல்லையே!
Deepavali special sweet: செம டேஸ்ட்டு.. சூப்பர் ஸ்வீட்டு.. தீபாவளிக்கு முந்திரி கேக் செய்யலாமா?
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}