சென்னை: மழைக்காக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி, கந்தர்வகோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அரியலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், தஞ்சாவூர், திருவாரூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது
இந்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் சனிக்கிழமைகளில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை விடுமுறையை ஈடு கட்டும் வகையில் சனிக்கிழமைகளில் இந்தப் பள்ளிகள் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதனால் மழை லீவு காரணமாக குஷியாகியுள்ள மாணவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மழை காரணமாக விடுமுறை விட்டு படிப்பு பாழாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் அதை ஈடு கட்டும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது. எனவே மாணவர்களே, மழையை இன்னிக்கு நல்லா அனுபவிங்க.. சனிக்கிழமை ஸ்கூலுக்குப் போய் ஜாலியா பாடத்தையும் படிச்சுருங்க.. அவ்வளவுதானே!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
{{comments.comment}}