தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்

Sep 04, 2024,09:08 PM IST

சென்னை:   வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் ஒன்பதாம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு  காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இரண்டாவது நாளாக தொடர்ந்து நேற்று மாலை சென்னையில்  வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் இரவில்  இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. 




குறிப்பாக நேற்று இரவு திருவான்மியூர், அடையார், மெரினா, பிராட்வே, மந்தவெளி, அமர்ந்தகரை, அண்ணா நகர், வில்லிவாக்கம், ஆவடி, அம்பத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அதைப்போல் திருவொற்றியூர், ராணிப்பேட்டை, எண்ணூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், போன்ற சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. திடீரென பெய்த  இந்த மழையால் சாலை ஓர வியாபாரிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.


இதற்கிடையே ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 9 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது . அதேசமயம் மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை புதியதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நயினார் நாகேந்திரனை தனியாக சந்தித்தது ஏன்.. வதந்தி கிளப்பக் கூடாது.. எஸ்.பி. வேலுமணி ஆவேசம்!

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

தவெக மாநாட்டுக்கு நிலம் தந்த விவசாயிகள்.. விருந்து வைத்த விஜய்.. வாசலில் வரவேற்ற புஸ்ஸி ஆனந்த்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

தொடர் உயர்வில் தங்கம்... சவரன் ரூ.58,000த்தை கடந்தது.. திகைப்பில் மக்கள்

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

சனாதன சக்திகளை ஓங்க விட்டு விடாதீர்கள்.. திரைத்துறையினருக்கு திருமாவளவன் கோரிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்