கன மழை பாதிப்பு எதிரொலி.. அரையாண்டுத் தேர்வுகள்.. முதல் இரு தேர்வுகளின் தேதியில் மாற்றம்

Dec 06, 2023,06:54 PM IST

சென்னை:  மிச்சாங் புயல் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும் மீளாததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகளின் முதல் இரு தேர்வு தேதிகளை அரசு மாற்றியமைத்துள்ளது.


மிச்சாங் புயல் பாதிப்பு காரணமாக  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.




புயலால் ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் தேங்கி, கடல் போல் காட்சி அளிக்கின்றன. புயல் சென்றாலும் புயல் ஏற்படுத்திய சேதாரங்கள் இன்னும் மாறவில்லை. பல பகுதிகளில் இடுப்பளவிற்கு மழைநீர் தேங்கி உள்ளதால் மின்சாரம், மொபைல் டவர், இணையதள சேவை ஆகியவை தொடர்ந்து முடங்கி உள்ளன. என்ன தான் அரசு விரைந்து செயல்பட்டாலும், மீட்பு பணி முடிந்த பாடில்லை. இயற்கை ஏற்படுத்திய பாதிப்பில் சிக்கிய சென்னை வாசிகளின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது.


அரையாண்டுத் தேர்வு  தேதியில் மாற்றம்


இந்த மாவட்டங்களில் இயல்பு நிலைமை முழுமையாக திரும்ப இன்னும் ஒரு வாரமாவது ஆகும் என்று தெரிகிறது. இந்த நிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 


மேலும் இந்த மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வுகளின் தேதிகளும் மாற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக  அரசு விடுத்துள்ள திருத்திய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:




தொடர் மழையின் காரணமாக அனைத்து அரசு மற்றும் ஏஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல் நிலை வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையில் 11.12.2023 முதல் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அதே பாடத்திற்கான தேர்வுகள் நடைபெறும் எனவும், 7.12.2023 மற்றும் 8.12.2023 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் மட்டும் 14.12.2023 மற்றும் 20.12.2023  ஆகிய தேதிகளில் முறையே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாட்கள் தயாரிக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செங்கல்பட்டு 6 தாலுகா - காஞ்சிபுரத்தில் 2 தாலுகா விடுமுறை


செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரை, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், வண்டலூர், திருக்கழுக்குன்றம் தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில்.. குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்