இம்பால்: மணிப்பூரின் தெளபால் மாவட்டத்திலிருந்து காங்கிரஸ் இளம் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று தொடங்கியது. இனக் கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மணிப்பூரிலிருந்து ராகுல் யாத்திரை தொடங்கியுள்ளது.
ராகுல் காந்தியுடன் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் என பலரும் இடம் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தனது பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தியவர் ராகுல் காந்தி. அந்த யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய புத்துயிர் கொடுத்தது. சில மாநில தேர்தல்களில் காங்கிரஸுக்கு அது பெரும் வெற்றியைக் கொடுத்தது. அதற்கு சிறந்த உதாரணங்கள்.. கர்நாடகா மற்றும் தெலங்கானா.
இந்த நிலையில் தற்போது தனது 2வது யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். இந்த யாத்திரையானது, மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபெறவுள்ளது. இனக் கலவரத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலம் மணிப்பூர், பெண்களுக்கு எதிராக இங்கு நடந்த மிகக் குரூரமான வன்முறை உலகையே உலுக்கியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கொந்தளித்துக் கருத்து தெரிவிக்கும் நிலைக்குப் போனது.
இந்த நிலையில் அப்படிப்பட்ட மணிப்பூரிலிருந்து இன்று தனது 2வது கட்ட யாத்திரையைத் தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. முன்னதாக தலைநகர் இம்பாலிலிருந்து யாத்திரையைத் தொடங்க திட்டமிட்டிருந்தார் ராகுல் காந்தி. ஆனால் அதற்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி தரவில்லை. இதையடுத்து தற்போது யாத்திரையை தெளபால் மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர். அங்குள்ள தனியார் இடத்திலிருந்து யாத்திரை தொடங்கியது.
மணிப்பூர் உள்பட 5 வட கிழக்கு மாநிலங்கள் வழியாக இந்த யாத்திரை தொடர்ந்து, மகாராஷ்டிரா வரை செல்லவுள்ளது. மணிப்பூரில் கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தொலைவுக்கு யாத்திரை செல்லவுள்ளது. முன்னதாக, ஆங்கிலோ - மணிப்பூர் போரில் கொல்லப்பட்ட தியாகிகளின் நினைவாக தெளபாலில் அமைக்கப்பட்டுள்ள கோங்ஜோம் போர் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு ராகுல் காந்தி யாத்திரை தொடங்கியது. இரவு இம்பாலில் ராகுல் காந்தி தங்கி ஓய்வெடுத்த பின்னர் நாளை மீண்டும் யாத்திரை தொடங்கும்.
மொத்தம் 66 நாட்கள் இந்த யாத்திரை நடைபெறவுள்ளது. 6700 கிலோமீட்டர் தொலைவுக்கு யாத்திரை நீளவுள்ளது. 15 மாநிலங்களைச் சேர்ந்த 110 மாவட்டங்களை யாத்திரை கவர் செய்யவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த 2வது யாத்திரை பெருமளவில் காங்கிரஸுக்கும் அதன் கூட்டணிக்கும் லாபம் தரலாம் என்று அந்தக் கட்சி பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.
தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
ஸ்ரீ ராம நவமி.. ராம பிரானின் அவதார தினம்.. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}