வயநாடு தொகுதியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி.. பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிப்பு

Jun 17, 2024,07:38 PM IST

டெல்லி: வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் எம்.பியாக தொடரவுள்ளதாகவும், வயநாடு தொகுதியில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா போட்டியிடுவார் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் கடந்த முறையும் அவர் அபார வெற்றி பெற்றிருந்தார். ரேபரேலி தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் முன்பு உறுப்பினர்களாக இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த நிலையில் இரு தொகுதிகளிலும் அவர் அபார வெற்றி பெற்றார். இதனால் எந்தத் தொகுதியை ராஜினாமா செய்வது என்பதில் ராகுல் காந்திக்கே குழப்பமாக உள்ளதாம். இரு தொகுதி மக்களும் எனது கடவுள்கள். எனவே இதை அவர்களே முடிவு செய்யட்டும் என்று சமீபத்தில் வயநாட்டில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியிருந்தார்.


தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் முடிவு




இந்த நிலையில், இன்று தனது முடிவை அறிவித்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்திய பின்னர் வயநாடு தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.


புதிய சாதனை படைக்கப் போகும் சோனியா குடும்பம்:


பிரியங்கா காந்தி இதுவரை தேர்தல்களில் போட்டியிட்டதில்லை. அவர் உ.பி மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவராக இருந்து வருகிறார். அவர் ரேபரேலி தொகுதியில்தான் போட்டியிடுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது அவரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அழைத்து வருகிறார்கள்.  பிரியங்கா காந்தி வயநாட்டில் வெற்றி பெற்றால் புதிய சாதனை ஒன்று படைக்கப்படும்.


வட இந்தியத் தலைவர்கள் யாரும் தெற்கில் போட்டியிட்டு வென்றதில்லை. சோனியா காந்திதான் அந்த சாதனையை முதலில் செய்தார். கர்நாடகத்தின் பெல்லாரி தொகுதியில் அவர் போட்டியிட்டு வென்றார். வலிமை வாய்ந்த சுஷ்மா சுவராஜைத் தோற்கடித்தவர் அவர். அதன் பின்னர் அவரது மகன் ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்டார். இப்போது அதே குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்காவும் வயநாட்டில் வெற்றி பெற்றால், தெற்கில் போட்டியிட்டு வென்ற முதல் வட இந்திய அரசியல் குடும்பம் என்ற பெருமை சோனியா குடும்பத்துக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

அமரன் படத்தினால் மனஉளைச்சல் அடைந்த மாணவன்.. ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

கொங்கு நாட்டு நெல்லி, தக்காளி சட்னி + multigrains ஆட்டா அடை.. செம காம்போ மக்களே.. சாப்ட்டு பாருங்க

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்