அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

Nov 21, 2024,06:22 PM IST

புதுடில்லி: கெளதம் அதானி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.


ரூ.16,800 கோடி மதிப்பிலான சூரிய மின்சக்தி திட்ட ஒப்பந்தத்தை பெற அதானி ரூ.2,100 கோடி லஞ்சம் தர முன்வந்ததாக நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை பெற்றதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 




இந்த வழக்கில் அதானி மட்டுமின்றி அவரது உறவினர்கள் உள்ளிட்ட 7 பேரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அதானி உள்ளிட்டோருக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அதானி நிறுவன பங்குகளுக்குப் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் ரூ. 2 லட்சம் கோடிக்கு மேலான இழப்பை அதானி நிறுவனங்கள் சந்தித்துள்ளன.


இன்று காலை முதல் அதானி பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அதானி குழுமத்தின் பங்கு வீழ்ச்சியால் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளும் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.  அது மட்டுமல்லாமல், அதானிக்குக் கடன் கொடுத்துள்ள ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ், ஐடிஎப்சி உள்ளிட்ட வங்கிகளின் பங்குகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன.


இந்நிலையில்,  அதானி விவகாரம் குறித்து எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அதானிக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும். இந்தியாவில் இருக்கும் வரை அதானியை கைது செய்யவோ அல்லது விசாரணை நடத்தவோ மாட்டார்கள். ஏனென்றால் அரசு அவரைக் காப்பாற்றுகிறது.


அவர் இந்தியாவின் மற்றும் அமெரிக்காவின் சட்டத்தையும் மீறி உள்ளார் என்பதை நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் தெளிவாக காட்டுகிறது. முறைகேடு வழக்குகளில் நாட்டின் முதலமைச்சர்களே கைது செய்யப்படும்போது அதானி சுதந்திரமாக சுற்றுவது ஏன்? எதிர்கட்சி தலைவராக மக்களவையில் இந்த விவகாரத்தை நான் கேள்வி எழுப்புவேன்.


நாங்கள் தொடர்ந்து அதானி குறித்தும் செபி தலைவர் மாதவி புச் குறித்தும் பேசி வருகிறோம். விசாரணை கோரி வருகிறோம். ஆனால் இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதானியை பிரதமர் மோடி காப்பாற்றுகிறார். இதனால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றார் அவர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்