சம்பல் செல்ல முயற்சித்த ராகுல் காந்தி.. தடை போட்ட உ.பி. போலீஸ்.. டெல்லிக்கே திரும்பினார்!

Dec 04, 2024,05:59 PM IST

லக்னோ: வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு போலீசாருடன் தனியாக செல்ல தயாராக இருப்பதாகவும், ஆனால்  அங்குள்ள போலீசார் அனுமதிக்க மாறுப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். போலீஸார் அவரை சம்பல் பகுதிக்குச் செல்ல அனுமதிக்காத காரணத்தால் ராகுல் காந்தி டெல்லிக்குத் திரும்பிச் சென்றார்.


உத்திரப்பிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஷாஹி  ஜமா பள்ளிவாசல் உள்ளது. மொகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல் இந்து கோவிலை இடித்து கட்டப்பட்டு இருப்பதாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த இடத்தில் ஆய்வு செய்து, அதன் உண்மை தன்மையை சரிபாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.




அதன்படி, அங்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதே போல், கடந்த மாதம் 24ம் தேதி அதிகாரிகள் 2வது முறையாக மீண்டும் ஆய்வு நடத்த வந்தனர். அப்போது அங்கு கூடி இருந்த ஏராளமானோர் ஆய்வு குழுவினர்களை எதிர்த்து கோஷமிட்டனர். அப்போது அங்கு போலீசார் சமாதனம் செய்ய முற்பட்ட நிலையிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ராட்டக்காரர்கள் தரப்பில் இருந்து கற்கள் வீசப்பட்டதால், போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இந்த கலவரத்தில் பொதுமக்கள் 4 பேர் பலியாயினர்.


வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பல் மாவட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியும், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியும் செல்ல திட்டமிட்டிருந்தனர்.அதன்படி  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட காங்கிஸ் எம்.பிக்கள் 7 பேர் காரில் சம்பல் மாவட்டத்திற்கு இன்று புறப்பட்டனர். 


உத்திரப்பிரதேச காசியாபாத் எல்லையை நெருங்கிய போது அவர்களது காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். சட்ட ஒழுங்கு காரணமாக சம்பல் பகுதிக்கு அவர்கள் செல்ல முடியாது என்று கூறி மேற்கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர். நீண்ட நேரம் காவல்துறையினருடன் ராகுல் காந்தி நீண்ட நேரம் வாதாடினர். ஆனால் போலீஸார் தங்களது முடிவில் திட்டவட்டமாக இருந்தனர். 


இதனையடுத்து சம்பல் மாவட்டத்திற்கு செல்ல போலீசார் அனுமதி மறுப்பதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சம்பல் மாவட்டத்திற்கு செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். இது அரசியமைப்பு எனக்கு வழங்கியுள்ள உரிமை. போலீசாருடன் நான் மட்டும் தனியாக சம்பல் மாவட்டத்திற்கு செல்ல தயார். ஆனாலும் எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.


நீண்ட நேரம் வாதாடியும் பலன் கிடைக்காததால் ராகுல் காந்தியும் மற்றவர்களும் டெல்லிக்கே திரும்பிச் சென்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்