சென்னை: தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் டெல்லி வரை எதிரொலித்துள்ளது. தேசியக் கட்சியின் தலித் தலைவர் இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பலரையும் அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்தை தற்போது காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய முறையில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நாம் உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.
மாயாவதி சென்னை விரைகிறார்
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதிச் சடங்கில் பங்கேற்கவும் பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை மாயாவதியே வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடும் உழைப்பாளியும், அர்ப்பணிப்புடன் கூடியவருமான தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டுக்கு வெளியே கொலை செய்யப்பட்டிருப்பது சமுதாயத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நிலைமையின் தீவிரம், சோகம் கருதி, நாளை காலை நான் சென்னை வருகிறேன். ஆம்ஸ்ட்ராங்குக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளேன். அனைவரும் அமைதியைக் கடைப்பிடித்து, கட்டுப்பாடு காக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மாயாவதி.
இதற்கிடையே பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்னர் ஆம்ஸ்ட்ராங் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது கட்சி அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று தெரிகிறது. அங்கு பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்பட்டவுள்ளதாக தெரிகிறது. இதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}