"ரா..ரா.. சரசுக்கு ரா..ரா".. மொத்தம் 60 வெட்டு.. என்னங்க சொல்றீங்க.. ஆனாலும் அசரலையே!

Oct 06, 2023,04:40 PM IST

- சங்கமித்திரை


சென்னை: ஒரு படத்துக்கு ஒன்னு ரெண்டு வெட்டுன்னா பரவாயில்லை.. ஆனால் 60 வெட்டு என்பதெல்லாம் கேட்கும்போதே நெஞ்சு வெடிக்கிற மாதிரி இருக்குல்ல.. ஆனாலும் இத்தனை வெட்டு வாங்கியும் கூட கொஞ்சம் கூட அசரலையாம் "ரா..ரா.. சரசுக்கு ரா..ரா" படக் குழு.


லேடீஸ் ஹாஸ்டலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்தான் இந்த 'ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..' ஒரு நாள் இரவில் நடக்கும் கதையாம். 




சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..என்ற பாடலையும் அதற்கான காட்சிகளையும் ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். அதையே தலைப்பாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.  இயக்கியிருப்பவர் கேஷவ் தெபுர். 


இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி என்று இந்திய மொழிகளில் சுமார் 350 திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். நடன இயக்குநர்கள் பிரபுதேவா, ஆர் ஆர் ஆர் படத்தில் ஆஸ்கர் விருதை வென்ற 'நாட்டு நாட்டு '  பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித், ராகவா லாரன்ஸ் போன்றவர்களிடம் உதவி நடன இயக்குநராகப் பணியாற்றியவர்.


பல்வேறு மொழிகளில் நடனக் கலைஞராக சுமார் 2000 படங்களில் தோன்றி ஆடியவர். அப்படிப்பட்ட நடன இயக்குநர் இயக்கி உள்ள படம்தான் இந்த ராரா சரசுக்கு ரா ரா. இப்படத்தில் கார்த்திக், காயத்ரி பட்டேல் , கலக்கப் போவது யாரு பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா ,அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி ,ஜெஃபி, ஜெயவாணி, அக்ஷிதா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இருக்கிறது.


சரி கதையைச் சொல்லுங்க பாஸ்.. 

\



அதாவது லேடீஸ் ஹாஸ்டலுக்குள்  நுழைந்த சில வாலிபர்கள் ஒரு க்ரைமுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் .அதிலிருந்து அவர்கள்  வெளிவந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் ஒன்லைன். இதற்கிடையே நடக்கும் பரபரப்பான விறுவிறுப்பான கிளுகிளுப்பான சம்பவங்கள் தான் கதை செல்லும் பாதை. க்ரைம், ஆக்சன், ஹாரர் அனைத்தும் நிரம்பிய ஒரு கதையாக இது இருக்கும்.


இதன் தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்டமியிடம் கேட்டபோது....


"இப்படத்தின் கதை ஒரே இரவில் நடக்கிறது. பெல்லாரி ராஜாவும் தாமோதரனும் அரசியலில் ஒன்றாக இருந்து பகைவர்களாக மாறியவர்கள். பெல்லாரி ராஜா தாமுவைக் கொன்று விடுகிறான். அதை நேரில் பார்த்த பெண் வீடியோ எடுத்து விடுகிறாள். அவளைத் துரத்துகிறது பெல்லாரி கும்பல். அவள் எஸ்.ஆர்.லேடீஸ் ஹாஸ்டலுக்குள் ஓடிப் போகிறாள். லேடிஸ் ஹாஸ்டலுக்குள் இளைஞர்கள்  இரண்டு பேர் நுழைந்து விடுகிறார்கள். அங்குள்ள இரு பெண்களால் ஒரு கால் பாய் அழைக்கப்படுகிறான். ஆள் மாறாட்டக் குழப்பத்தில் ஒரு கொலை நடக்கிறது. இப்படி அடுத்தடுத்த கொலைகள், பரபரப்பு விறுவிறுப்பு கொண்ட பின்னணியில் இக்கதை உருவாகியுள்ளது" என்கிறார் தயாரிப்பாளர்.


60 வெட்டுங்க.. 60 வெட்டு!




இந்தப் படத்தை சென்சார் போர்டில் கொண்டு போய் கொடுத்து சர்ட்டிபிகேட் கொடுங்கன்னு கேட்டபோது, படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்தில் கத்திரியை வைத்து விளையாடி விட்டார்களாம். 


படத்தில் இடம்பெற்றுள்ள இக்கால இளைஞர்களும் யுவதிகளும் பேசும் அரட்டைகளும் , சுதந்திரமான காட்சிகளும் பார்த்து அதிர்ந்து போன சென்னை மண்டல தணிக்கை அதிகாரி அறுபது வெட்டுகள் கொடுத்திருந்தார். ஆனால் அதையும் மீறி  மும்பை சென்று மறு தணிக்கை செய்து வந்துள்ளார்கள். 


இப்படம் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. வெட்டுப்பட்டது போக படத்தில் என்ன இருக்கிறது என்பதை வந்து பார்த்த பிறகுதான் தெரியும்.

சமீபத்திய செய்திகள்

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்