விலாடிமிர் புடினை சும்மா விடக் கூடாது.. அவரைத் தண்டிக்க வேண்டும்.. அலெக்ஸி நவல்னியின் மனைவி ஆவேசம்!

Feb 17, 2024,08:12 AM IST

மாஸ்கோ: எனது கணவரின் மரணத்துக்கு அதிபர் புடின்தான் காரணம் என்றால், அவரை சும்மா விடக் கூடாது. அவர் தப்பக் கூடாது.. அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று சிறையில் மரணமடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவி யூலியா நவல்னியா  ஆவேசமாக கூறியுள்ளார்.


அலெக்ஸி நவல்னியின் திடீர் மரணம் மேற்கத்திய நாடுகளிலும் ஐரோப்பாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தீவிர புடின் எதிர்ப்பாளர் என்பது உலகம் அறிந்த ஒன்று.  மேலும் அவரைக் கொல்லவும் கடந்த காலத்தில் முயற்சி நடந்தது. சோவியத் யூனியன் இருந்தபோது, எதிரிகளை  கொல்லும் பாணியில், "நோவிசோக்" என்ற கொடிய விஷம் கொடுத்து அவரைக் கொல்ல முயன்றனர். இப்படி கடந்த காலத்தில் அவரது உயிர் குறி வைக்கப்பட்டிருப்பதால், இப்போது அலெக்ஸியின்  மரணம் இயற்கையானதாக இருக்க வாய்ப்பில்லை என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.




அலெக்ஸியின் மரணம் குறித்து அவரது மனைவி யூலியா நவல்னியா ஆவேசமடைந்துள்ளார்.  ஜெர்மனியின் மியூனிச் நகரில் நடந்து வரும் பாதுகாப்பு மாநாட்டில் அவர் பங்கேற்றுள்ளார்.   வந்த இடத்தில் அவரை கணவரின் மரணச் செய்தி உலுக்கியுள்ளது. இருப்பினும் திட்டமிட்டபடி அவர் மாநாட்டில் கலந்து கொண்டார். மிகுந்த சோகத்துடனும் துயரத்துடனும் பங்கேற்பாளர்கள் மத்தியில் பேசினார். அதேசமயம், மிகவும் திடமான முறையில் அவரது பேச்சு அமைந்திருந்தது.


யூலியா நவல்னியாவின் பேச்சு:


இந்த நேரத்தில் நான் உங்கள் முன் நின்று கொண்டிருப்பது சரியா அல்லது எனது பிள்ளைகளுடன் இருப்பது சரியா என்று ஒரு நிமிடம் யோசித்தேன். எனது கணவர் எனது இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்ற எண்ணம் தொடர்ந்து வந்தது. இதனால் இங்கு உங்களுடன் இருக்க முடிவு செய்தேன்.


ரஷ்ய நிர்வாகம் தெரிவித்துள்ள எந்த  விளக்கத்தையும் ஏற்க என்னால் முடியவில்லை. காரணம் அவர்கள் தொடர்ந்து பொய்களைத்தான் சொல்லி வருகிறார்கள். இப்போது மட்டும் உண்மையைச் சொல்லி விடுவார்கள் என்று எப்படி நம்புவது?




அவர்கள் மீது தவறு இருந்தால், எனது கணவருக்கும், எனது குடும்பத்துக்கும், எனது நாட்டுக்கும் அவர்கள் செய்த இந்த கொடும் செயலுக்கு ஒருவர் கூட தப்பக் கூடாது. புடின், அவருடயை பணியாளர்கள், அவருடைய அதிகாரிகள் என அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இது விரைவில் நடக்கும்.


சர்வதேச சமுதாயம், உலக நாடுகள், உலக மக்கள் அனைவரும் இந்த  தீய சக்திக்கு எதிராக அணி திரள வேண்டும், ஒன்றுபட வேண்டும், இணைந்து போராட வேண்டும். ரஷ்யாவை இன்று ஆண்டு வருவது மிகவும் கொடூரமான கூட்டம். நாட்டு மக்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக புடினும், அவரது கூட்டாளிகளும் பல்வேறு கொடும் செயல்களைப் புரிந்து வருகின்றனர் என்று ஆவேசமாக பேசினார் நவல்னியா.


நவல்னியா பேசத் தொடங்குவதற்கு முன்பு அரங்கில் கூடியிருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று கை தட்டி நவல்னியாவுக்கு தங்களது ஆதரவையும், ஆறுதலையும் தெரிவித்தனர். அந்த இடமே மிகவும் உருக்கமாக காணப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்