புஷ்பா 2: பட்டையை கிளப்பும்.. SOODAANA The Couple Song வெளியானது

May 29, 2024,11:59 AM IST

சென்னை:   புஷ்பா 2 படத்தின் 2வது பாடல் இன்று வெளியானது. இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமான ரசிகள் இணையத்தில் பார்த்து வருகின்றனர். 


மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின்  டீசர் கடந்த மாதம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக்கியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 




இதன் டீசர் மற்றும் முதல் சிங்கிளான 'புஷ்பா...புஷ்பா' பாடல் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை இன்னும் இரண்டு மடங்காக்கியுள்ளது. 'புஷ்பா: தி ரூல்' படத்தின்  இரண்டாவது சிங்கிள் 'சூடானா...(கப்புள் பாடல்)' அறிவிப்பு ராஷ்மிகா இருக்கும் புரோமோவுடன் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமாகினர். படப்பிடிப்பு தளத்தில் இருந்து ராஷ்மிகா, ஸ்ரீவள்ளியாக மாறும் சுவாரஸ்யமான காட்சிகளுடன் இந்த புரோமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


'புஷ்பா1' படத்தில் புஷ்பா மற்றும் ஸ்ரீவள்ளி கதாபத்திரங்களுக்கு இடையேயான காதல் பாடலாக 'சாமி சாமி' ஹிட்டடித்தது. அதே போன்ற காதல் பாடலாக 'சூடானா...' ஹிட் அடிக்கும் இருக்கும் என இந்த புரோமோ உறுதியளிக்கிறது. இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சந்திரபோஸ் பாடலை எழுதியுள்ளார். படத்தின் இசை உரிமையை டி-சீரிஸ் கைப்பற்றியுள்ளது. இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். புஷ்பா 2 படத்துக்காக தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஒரு பாடைல தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி என 6 மொழிகளில் பாடியுள்ளார் ஸ்ரேயோ கோஷல்.


புஷ்பா2 தி ரூல் படத்தில் இருந்து வெளியான 'புஷ்பா புஷ்பா' பாடல் சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கானது. அல்லு அர்ஜூன் புஷ்பாவாக நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும், அல்லு அர்ஜூனின் தோற்றமும் ரசிகர்களை வசீகரித்து கமர்ஷியல் படத்திற்கான எல்லா விஷயங்களும் இதில் இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது. புஷ்பா 1 விட புஷ்பா 2 பட்டையை கிளம்பும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்