வெள்ளக்காடான புன்னக்காயல்.. எங்கு பார்த்தாலும் வெள்ளம்.. தீவு போல மாறியதால் மக்கள் வெளியேற்றம்!

Dec 14, 2024,08:04 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கிராமம் முழுக்க முழுக்க தீவு போல மாறிக் காணப்படுகிறது. தாமிபரணி ஆறு கடலில் கலக்கும் இடமான இங்கு மிகப் பெரிய அளவில் வெள்ளம் வந்து கொண்டிருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெள்ளக்காடாக மாறி இருக்கிறது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. தாமிரபரணி ஆறு கடைசியாக கடலில் கலக்கும் இடம்தான் புன்னக்காயல். கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இங்கு கிட்டத்தட்ட 20,000 பேர் வரை வசிக்கிறார்கள்.




ஒவ்வொரு பெரு வெள்ளத்தின்போதும் புன்னக்காயல் பகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது. காரணம் தாமிரபரணி ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் இந்த கிராமம் தீவு போல மாறி விடும். இப்போதும் அது போலத்தான் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளமாக உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தூத்துக்குடியிலும் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காணப்படுகிறது. அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்ததால் மழை நீருக்கு மத்தியில் அமர்ந்து டாக்டர்கள் பணியாற்றும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் தற்போது மேல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

10 வருடங்களுக்கு பிறகு‌‌.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!

news

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்

news

அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!

news

முஸ்லிம்கள், இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

news

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்.. நீதிபதி பி.ஆர். கவாய்.. மே 14ல் பதவியேற்பு

news

காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

news

யாரு இவங்களா.. அச்சச்சோ பயங்கரமான ஆளாச்சே.. ரகசியம் காப்பதில் கில்லாடிகள் இந்த 5 ராசிக்காரர்கள்!

news

வருமான வரித்துறை + ராணுவம் + தொல்லியல் துறை + உள்ளூர் மக்கள்... 5 மாதம் நீடித்த புதையல் வேட்டை!

news

இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியீடு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்