"பதவியிலிருந்து  விலகுகிறேன்"..  பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் திடீர் அறிவிப்பு!

Feb 03, 2024,03:17 PM IST

சண்டிகர்: பஞ்சாப் ஆளுநர் பதவியிலிருந்தும், சண்டிகர் நகர நிர்வாகி பொறுப்பிலிருந்தும் விலகுவதாக பன்வாரி லால் புரோஹித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.


பல்வேறு சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்து, மாநில அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தவர் பன்வாரி லால் புரோஹித். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடுமையாக கண்டிக்கப்பட்டவர். இந்தநிலையில் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பஞ்சாப் ஆளுநராகவும், சண்டிகர் நிர்வாகியாகவும் அவர் பதவி வகித்து வந்தார். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 




பஞ்சாபில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. பகவந்த் மான் தலைமையிலான அரசுக்கும், புரோஹித்துக்கும் இடையே நிறையப் பிரச்சினைகள் உள்ளன. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் இழுத்தடிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது.


கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் புரோஹித்துக்கு சரமாரியான கேள்விகளைக் கேட்டது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் கடுமையான கேள்விகளை எழுப்பியது. நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள் என்ற கடுமையான வார்த்தையையும் பெஞ்ச் பயன்படுத்தியது. அதேபோல நவம்பர் 23ம் தேதி நடந்த விசாரணையின்போது மீண்டும் ஆளுநருக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது உச்சநீதிமன்றம். தேவையில்லாமல் காலவரையின்றி சட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.  சட்டசபையில் நிறுத்தப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.


இந்த நிலையில்தான் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சில காரியங்கள் காரணமாகவும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக  ஆளுநர் புரோஹித் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் ஆளுநராக இருப்பதற்கு முன்பு தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்தவர் புரோஹித். இங்கும் சில சர்ச்சைகளில் அவர் சிக்கினார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

Govt Holidays 2024: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்