சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட தேர்தல் போல இது நடத்தப்படுகிறது.
போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாதம் நமது நாட்டில் ஒழிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் மீண்டும் இது வரக் கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. இதற்காக போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம்கள் வருடா வருடம் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், இன்று சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 43,051 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த மையங்களில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
காலை 7 மணிக்கு முகாம் தொடங்கியது. மாலை 5 மணி வரை முகாம்கள் நடைபெறும். சொட்டு மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளின் விரலில் அடையாள மை வைக்கப்படும். இதன் மூலம் யாருக்கெல்லாம் சொட்டு மருந்து தரப்படவில்லை என்பதை அடையாளம் கான இலகுவாக இருக்கும்.
மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தரப்படுகிறது. கிட்டத்தட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில், அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்! போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள்... நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி என்று அவர் தெரிவித்துள்ளார்.
உங்க குழந்தைக்கும் சொட்டு மருந்து கொடுத்தாச்சா.. மறவாமல் செய்வீர்.. அது உங்களது குழந்தையின் நலனுக்கானது.
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
{{comments.comment}}