சந்திர பிரியங்கா ராஜினாமா இல்லை.. டிஸ்மிஸ்தான்.. ரங்கசாமி அதிரடி.. மத்திய அரசு ஒப்புதல்!

Oct 21, 2023,05:09 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர்  சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு முன்பே அவரை அதிரடியாக  டிஸ்மிஸ் செய்துள்ளார் முதல்வர் ரங்கசாமி. இந்த முடிவுக்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் சந்திரபிரியங்கா. காங்கிரஸ் தலைவராக இருந்த சந்திரகாசுவின் மகள் தான் இவர். போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக  செயல்பட்டு வந்தார் சந்திர பிரியங்கா. 




இந்த நிலையில் திடீரென என்ன நடந்ததோ தெரியவில்லை.. கடந்த 10ம் தேதி திடீரென  தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து நீண்டதொரு கடிதத்தையும் வெளியிட்டார். அதில், தன்னை ஜாதி ரீதியாகவும், பாலின ரீதியாகவும் பாரபட்சமாக நடத்துகிறார்கள், அவமதிக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.


ஆனால் அவரை ஏற்கனவே முதல்வர் ரங்கசாமி டிஸ்மிஸ் செய்து விட்டதாகவும், இதைத் தெரிந்து கொண்டுதான் தானே ராஜினாமா செய்வது போல கடிதம் வெளியிட்டிருக்கிறார் சந்திர பிரியங்கா என்றும் தகவல்கள் வெளியாகின. சந்திர பிரியங்காவின் ராஜினாமா தொடர்பாகவோ அல்லது அவரது டிஸ்மிஸ் தொடர்பாகவோ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்ததால் குழப்பமாக இருந்தது.


இந்த நிலையில் துணை நிலை ஆளுநர் தமிழிசையின் பெயரும் இதில் அடிபட்டது. ஆனால் அவரோ, எனக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு மகளைப் போலத்தான் சந்திர பிரியங்காவை, முதல்வர் ரங்கசாமி பார்த்துக் கொண்டார். ஒரு குடும்பம் போலத்தான் இந்த அரசு நடக்கிறது.  சந்திர பிரியங்காவுக்குத்தான் இதில் தொடர கொடுத்து வைக்கவில்லை என்று கூறியிருந்தார்.




இந்த நிலையில், சந்திர பிரியங்காவை முதல்வர் ரங்கசாமி டிஸ்மிஸ் செய்துள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. டிஸ்மிஸ் செய்தது தொடர்பான பரிந்துரைக் கடிதத்தை துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்த நிலையில் அதற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சந்திர பிரியங்காவின் பதவி பறி போயுள்ளது.


சந்திர பிரியங்கா எதற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என்ற விவாதம் தற்போது புதுச்சேரியில் கிளம்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்