தமிழுக்காக போராடியவர் கருணாநிதி.. முக்கிய திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும்.. முதல்வர் ரங்கசாமி

Mar 17, 2025,01:05 PM IST

புதுச்சேரி: தமிழுக்காக போராடியவர் மறைந்த கலைஞர் கருணாநிதி. புதுச்சேரியில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி சட்டசபையில் இன்று இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில்,  கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க புதுச்சேரி அரசு வாக்குறுதி அளித்தபடி ஏதாவது குழு அமைக்கப்பட்டதா இல்லையா என்று கேட்டார்.


இதற்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசினார். முதல்வர் ரங்கசாமி கூறுகையில், மிக மிக மதிக்க தலைவராக கலைஞர் இருக்கின்றார். தமிழுக்காக போராடியவர். தமிழக தலைவர்களையும் சார்ந்துதான் புதுச்சேரியில் நாம் இருக்கின்றோம். 




ஆனால் நீதிமன்றம் உத்தரவு உள்ளதால் புதுச்சேரியில் கலைஞர் சிலையை வைப்பதற்கு முடியாமல் உள்ளது. நிச்சயமாக கலைஞர் பெயரில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு பெயர் சூட்டப்படும். கலைஞர் கருணாநிதிக்கு எந்த அளவிற்கு மரியாதை செலுத்தப்படுமோ அந்த அளவிற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்படும். என முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்தார்.


புதுச்சேரி விமான நிலையப் பணிகள் குறித்த இன்னொரு கேள்விக்கு, தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு  இல்லாமல் இது நிறைவடையாது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனது வைத்தால் விமான நிலையப் பணிகள் முடிவடையும் என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்