காலை 9 டூ மாலை 4.20 வரை.. புதுச்சேரியில் அரசு பள்ளிகளின் பணி நேரம் மாற்றம்!

Jul 09, 2024,04:59 PM IST

புதுச்சேரி:   புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால் அரசுப் பள்ளிகளில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


புதுச்சேரி பள்ளிகளின் செயல்படும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால் இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தினசரி 7வகுப்பு நடைபெற்று வந்த நிலையில் இனி நடப்பு ஆண்டு முதல் 8 வகுப்புகள் நடைபெறும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. 




மாணவர்கள் கூடுதலாக பாடங்களை கற்கும் வகையில் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. இனி அரசுப்பள்ளிகள் அரை மணி நேரம் முன்னதாக அதாவது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4.20க்கு முடியும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரம் மாற்றம். ஜூலை 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


இது தொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலை 9 மணி முதல் 9.15 அசெம்பிளி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் முதல் பாட வேளை காலை 9.15 மணி முதல் 10.00 மணி வரையும், இரண்டாவது பாட வேளை 10 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறும். 10.45 முதல் 10.55மணி வரை மாணவர்களுக்கான இடைவேளை வழங்கப்படுகிறது. 


அடுத்ததாக காலை 10.55 முதல் 11.40 வரை மூன்றாவது பாடவேளையும், 11.40 முதல் 12.25 வரை நான்காவது பாட வேளையும் நடைபெறும். அதன்பின்னர் மதியம் உணவு இடைவேளையாக 12.25 முதல் 1.30 வரை ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிற்பகல் 1.30 முதல் 2.10 மணி வரை ஐந்தாவது பாட வேளையும், 2.10 மணி முதல் 2.50 வரை 6வது பாடவேளையும் நடைபெறும். இதற்கு அடுத்ததாக 2.50 முதல் 3 மணி வரை மாணவர்களுக்கான இடைவேளை வழக்கப்படும். மதியம் 3 மணி முதல் 3.40 வரை 7வது பாட வேளையும், 3.40 முதல் 4.20 வரை 8வது பாட வேளையும் நடைபெறும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. 


அதே வேளையில் காலை நேரத்தில் ஒரு பாட நேரம் 45 நிமிடமாகவும், மதியத்துக்கு பிறகு 40 நிமிடமாகவும் பாடவேளை நடைபெறும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

அதிகம் பார்க்கும் செய்திகள்